படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் மேஜிக் செய்து காட்டிய நபர். ‘கிரேஸி’ என்று தளபதி கொடுத்த ரியாக்ஷன்.

0
3359
vijay-magic

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். பல ஆண்டுகளாக இளைய தளபதி என்ற பட்டத்துடன் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து பிகில் படத்தை உருவாக்கி உள்ளார்கள். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் நயன்தாரா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், யோகிபாபு, விவேக், கதிர், ஷெராப், டேனியல் பாலாஜி என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது.

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் விஜய். அதிலும் அப்பா கதாபாத்திரத்தில் வரும் ராயப்பன் தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறார். அதோடு மத்த ரெண்டு படங்களைப் போலவே இந்தப் படமும் வசூலில் வேட்டையாடியது. பட்டி தொட்டி எல்லாம் இந்த படம் பட்டையை கிளப்பியது. மேலும், 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி தந்தது.

இதையும் பாருங்க : ரஜினி, கமல், விஜய், அஜித் குறித்த கேள்விகளுக்கு தமிழில் பதில் அளித்த சல்மான் கான். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

தற்போது நியூஸ் என்னவென்றால், இந்த பிகில் படத்தின் படப்பிடிப்பில் ரசிகர் ஒருவர் விஜயிடம் மேஜிக் செய்து காட்டி உள்ளார். அந்த மேஜிக் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் ‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் ”மாஸ்டர்″ என்ற படம் தயாராகி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இந்த படத்தை இயக்குகிறார். மேலும், அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இடையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சேத்தன், ரெட்டி உட்பட ஒட்டு மொத்த நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்தார்கள்.

-விளம்பரம்-
Advertisement