ஸ்ரித்திகா-ஆர்யன் ஜோடி சொல்லி இருக்கோம் குட் நியூஸ் கொடுத்து தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஸ்ரித்திகா. இவர் சன் டிவியில் 2010 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட “நாதஸ்வரம்” சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமாகி தனெக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து இவர் மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம், முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, உயிர், கல்யாண பரிசு, அழகு, மகராசி போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். மேலும், இவர் சீரியல் நடிகை மட்டும் இல்லாமல் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களில் நடிகை ஸ்ரிதிகா நடித்து இருந்தார்.
ஸ்ரித்திகா குறித்த தகவல்:
அதோடு விளம்பர படங்களிலும் கூட நடித்து இருந்தார். அதிலும், 2008 ஆம் ஆண்டு வெளியான ‘மகேஷ், சரண்யா மற்றும் பலர்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் வெள்ளித்திரையில் பிரபலமானார். பின் இவர் வெண்ணிலா கபடிகுழு, தனுஷின் வேங்கை, பாலு தம்பி மனசிலே, மதுரை To தேனீ உள்ளிட்ட ஒரு பல படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவருக்கு சினிமாவில் பட அமைப்புகள் சரியாக அமையவில்லை என்ற உடன் மீண்டும் சீரியல் நோக்கியே வந்து விட்டார்.

ஸ்ரித்திகா திருமணம்:
இதனிடையே கடந்த 2019 ஆண்டு நடிகை ஸ்ரிதிகாவுக்கு, சதீஸ் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுடையது அரேஞ்ச் மேரேஜ். இவருடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள். இவர்களின் திருமண புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. திருமணத்திற்கு பிறகும் ஸ்ரித்திகா சீரியல்களில் நடித்து வந்தார். மேலும், இவர் தெலுங்கு சீரியலில் நடித்து இருக்கிறார்.

ஸ்ரித்திகா-ஆர்யன் திருமணம்:
இதை அடுத்து இவர் திருமணம் ஆகி இரண்டு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ரித்திகா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர் ‘மகராசி’ சீரியலில் தன்னுடன் நடித்த ஆர்யன் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே தங்களுடைய முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று கடந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

ஸ்ரித்திகா கர்ப்பம்:
இப்படி இருக்கும் நிலையில் ஸ்ரித்திகா கர்ப்பமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஸ்ரித்திகா-ஆர்யன் போட்ட பதிவில், ரொம்ப சக்தியுடன் பெரும் பொறுப்பும் வருகிறது. எங்களுடைய பயணம் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மிகுந்த அன்பு ஆதரவுடன் தொடர்கிறது. இப்போது நாங்கள் பெற்றோராக எங்கள் வாழ்க்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுதிக்குள் அடியெடுத்து வைக்கிறோம். ரொம்ப மகிழ்ச்சியுடன் நாங்கள் சர்வவல்லமை உள்ளவரின் அனைத்து ஆசிர்வாதங்களாலும் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை உலகிற்கு அறிவிக்கின்றோம்.
சமூக ஊடக குடும்பத்தில் இருந்து நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்று கூறி இருக்கிறார்கள்.






