யாரடி நீ மோகினி படத்தில் சரண்யாவுக்கு டப்பிங் தந்தது இந்த சீரியல் நடிகையா..! புகைப்படம் உள்ளே !

0
1302
Saranya mohan

யாரடி நீ மோகினி’ படத்தில், ‘ஐ திங், அச்சச்சோ பகவானே… நேக்கு என்னன்னமோ பண்றதே’ என்கிற சரண்யா மோகன் டயலாக், அன்றைக்குப் பயங்கர ட்ரெண்ட். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி நான்தான்.

yaaradi-nee-mohini

அப்புறம், ஆக்டிங்கில் பிஸியானதால் டப்பிங்கை தள்ளிவெச்சிருந்தேன். இனி, நடிப்பு, டப்பிங் ரெண்டிலும் கவனம் செலுத்தப்போறேன்” எனப் புன்னகையுடன் பேசுகிறார், ஸ்ரித்திகா. சீரியல்கள் வழியே ஒவ்வோர் இல்லத்திலும் குடியிருக்கும் நாயகி.

டப்பிங் ஆர்டிஸ்ட் பணி தொடர்கிறதா?”

‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடிகை சரண்யா மோகனுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு வந்துச்சு. அந்த வாய்ப்பை சந்தோஷமா செய்தேன். நிறைய ரீச் கிடைச்சுது. ‘ஜெயம்கொண்டான்’, ‘ஆறுமுகம்’, ‘ஈரம்’ உள்ளிட்ட பல படங்களிலும் சரண்யாவுக்கு டப்பிங் கொடுத்தேன். வேற ஹீரோயின்களுக்கும் டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு வந்துச்சு.

shirthika

ஆனால், சீரியலுக்காகப் பெரும்பாலும் காரைக்குடியிலேயே இருந்ததால், டப்பிங் வாய்ப்புகளை ஏத்துக்க முடியலை. இனி, ஆக்டிங், டப்பிங் ரெண்டிலும் கவனம்செலுத்த முடிவுசெய்திருக்கேன். இன்னொரு விஷயம் சொல்லட்டுங்களா? நான் நல்லா பாடவும் செய்வேன்.