தமிழில் பப்லியான தோற்றம் கொண்ட நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று இடம்பிடித்து விடுகின்றனர்.குஷ்பு துவங்கி நித்யா மேனன் வரை பல்வேறு பப்லி நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்கள் தான். அந்த வகையில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘யாதுமாகி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிருஷ்டியும் ஒருவர். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.
தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியானமேகா திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தது. அந்த பாடல்கள் இவரது ரியாக்ஷனை கண்டு பலரும் இவரது வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக கூட வைத்திருந்தனர்.
மேலும்,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியை காதலிக்கும் செகண்ட் கதாநாயகியாக நடித்திருந்தார் அம்மணி.ஆனால், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வர முடியாமல் இருந்தாலும் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்துஇருந்தார் . இந்த படத்தில் சேரன், கனா காணும் காலங்கள் புகழ் இர்பான் கூட நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் ஸ்ருஷ்டியின் நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர், ,சமீபத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய பிரேசியர் தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான போஸ் ஒன்றை கொடுத்து இருந்தார்.
இதனை கண்ட இன்ஸ்டாகிராம்வாசி ஒருவர் பெண்கள் சட்டை அணிவது தவறில்லை. ஆனால் , பட்டன் போடாமல் அணிவது தவறு. தயவு செய்து எல்லா பட்டன்களையும் போடுங்கள்” என்றுகமன்ட் அடித்துள்ளார். ஏற்கனவே ராஜாவுக்கு செக் படத்தில் நடிகை சிருஷ்டி அரை நிர்வாணா காட்சியில் நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.
சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள சிருஷ்டி, இந்த படத்தின் இடைவெளி காட்சியில் ஒரு அரை நிர்வாணா காட்சி இருந்தது. ஆனால், அதில் நடிக்க ஒரு வாரத்திற்கு மேல் யோசித்தேன். அதன் பின்னர் அந்த காட்சி படத்திற்கு தேவை என்று என்னை அவர் சமாதானம் செய்துவிட்டார். அதன் பின்னர் தான் ஓகே சொன்னேன். ஏனேன்றால் அரை நிர்வாண காட்சியில் நடிப்பது எல்லாம் மிகப்பெரிய விஷயம் என்று கூறி இருந்தார் சிருஷ்டி.