அரை நிர்வாண காட்சியில் நடிக்க ஒரு வாரம் யோசித்தேன். ஆனால், இயக்குனர் அதை சொன்னதால் ஒப்புக்கொண்டேன்- நடிகை சிருஷ்டி.

0
94989
srushti dange
- Advertisement -

தமிழில் பப்லியான தோற்றம் கொண்ட நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று இடம்பிடித்து விடுகின்றனர்.குஷ்பு துவங்கி நித்யா மேனன் வரை பல்வேறு பப்லி நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்கள் தான். அந்த வகையில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘யாதுமாகி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிருஷ்டியும் ஒருவர். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

-விளம்பரம்-
 srushti dange rajuvuku check"

- Advertisement -

2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியானமேகா திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தது. அந்த பாடல்கள் இவரது ரியாக்ஷனை கண்டு பலரும் இவரது வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக கூட வைத்திருந்தனர்.

இதையும் பாருங்க : செய்வதறியாது நின்ற வாணி போஜனுக்கு தோழி கொடுத்த ஐடியா. ஆனால், அம்மணி இப்போ சின்னத்திரை நயன்தாரா.

மேலும்,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியை காதலிக்கும் செகண்ட் கதாநாயகியாக நடித்திருந்தார் அம்மணி.ஆனால், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வர முடியாமல் இருந்தாலும் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் கனா காணும் காலங்கள் புகழ் இர்பான் கூட நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

வீடியோவில் 6:48 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

இந்த படத்தில் நடிகை சிருஷ்டி அரை நிர்வாணா காட்சியில் நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார். சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள சிருஷ்டி, இந்த படத்தின் இடைவெளி காட்சியில் ஒரு அரை நிர்வாணா காட்சி இருந்தது. ஆனால், அதில் நடிக்க ஒரு வாரத்திற்கு மேல் யோசித்தேன். அதன் பின்னர் அந்த காட்சி படத்திற்கு தேவை என்று என்னை அவர் சமாதானம் செய்துவிட்டார். அதன் பின்னர் தான் ஓகே சொன்னேன். ஏனேன்றால் அரை நிர்வாண காட்சியில் நடிப்பது எல்லாம் மிகப்பெரிய விஷயம் என்று கூறியுள்ளார் சிருஷ்டி.

Advertisement