செய்வதறியாது நின்ற வாணி போஜனுக்கு தோழி கொடுத்த ஐடியா. ஆனால், அம்மணி இப்போ சின்னத்திரை நயன்தாரா.

0
18890
vani-bhojan
- Advertisement -

சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தெய்வமகள் சீரியல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
vani Bhojan

ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார் பின்னர் இவரது குடும்பம் ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்து விட்டதால் தனது தோழி கூறிய அறிவுரையின் பெயரில் மாடலிங்கில் ஈடுபட்டார்.பின்னர் ஒருசில விளம்பர படங்களில் நடித்த வாணி போஜனுக்கு முதலில் ‘மாயா’ என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .

இதையும் பாருங்க : வாய்ப்புகள் வந்தும் நிராகரித்துள்ள தாஸ் பட நடிகை. தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.

- Advertisement -

அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். வீட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் ரசிகர்கள் கொண்டுள்ள இவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக கூறி உள்ளார். மேலும்,தற்போது நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் வாணி போஜன். தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தேவர் கொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புடு’ என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

Image result for vani bhojan childhood"

-விளம்பரம்-

தற்போது அசோக் செல்வன் நடித்து வரும் ‘ஒ மை கடவுளே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் அருண்பாண்டியன் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் பெயரிடப்படாத ஒரு தமிழ் படத்திலும் பெயரிடப்படாத ஒரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகியுள்ளார் வாணி போஜன் ஒருகாலத்தில் விமான பணிப்பெண்ணாக இருந்த வாணிபோஜன் தற்போது சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது பாராட்டுக்குரிய விஷயம் தான்.

Advertisement