கருப்பு குடிநீர் குடிக்கும் நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை என பல நடிகைகள் இந்த கருப்பு குடிநீரை குடிக்கிறார்கள். கிறீன் டீ, இஞ்சி டீ, தேயிலை டீ என பல வகை குடிநீரை பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம். அதென்ன கருப்பு குடிநீர்? அதனால் என்ன பயன்? ஏன் இந்த வகை குடிநீரை நடிகைகள் குடிக்கிறார்கள்? என்பதை பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.
அதாவது கருப்பு குடிநீர் என்பது கார நீர் அல்லது கார அயனியாக்கம் செய்யப்பட்ட குடிநீர் தான் கருப்பு குடிநீர். உடற்பயிற்சிக்கு பிறகு அல்லது அதிகம் வியர்வை ஏற்பட்ட பிறகு இந்த குடிநீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு மின்பகு பொருட்களை (electrolytes) வழங்குகிறது. சொல்லப்போனால், உடல் எடையை சரியாக பராமரிக்க இந்த கருப்பு குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த தண்ணீரின் பி எச் அளவு ஏழுக்கு மேல் இருப்பது தோலின் வயதான தோற்றத்தையும் குறைக்கிறது.
மேலும், இந்த கருப்பு குடிநீரை உற்பத்தி செய்ய 70-க்கும் மேற்பட்ட கனிமங்களை சேர்ப்பதாக கூறப்படுகிறது. இதனால், கருப்புக் குடிநீர் உயிரியல் செயல்முறைகளின் வழியாக செரிமானத்தை மேம்படுத்துவது, அமிலத்தன்மையைக் குறைப்பது, நோய் எதிர்ப்பாற்றலை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறது. உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த கார நீர் குடிப்பது மிகவும் நல்லது என்று ஆராய்ச்சியிலும் கூறியிருக்கிறார்கள்.
இவ்வளவு பயன் உள்ள இந்த கருப்பு குடிநீர் 500 மில்லி கொண்ட 6 புட்டிகளின் விலை மட்டும் 600 ரூபாய் என்று கூறப்படுகிறது. அரை லிட்டர் கருப்பு குடிநீர் 100 ரூபாய் அல்லது அதிலிருந்து குறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த கருப்பு குடிநீர் குடிப்பதன் மூலம் பெரிய அளவில் ஆபத்தெல்லாம் இல்லை என்றெல்லாம் என்றும் கூறியிருக்கின்றனர். இந்தியாவில் பரவலாக காணப்படும் கருப்பு குடிநீர் நிறுவனம் எவோக்கஸ் ஆகும்.
இந்நிலையில் இந்த கருப்பு குடிநீர் குடிக்கும் நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலகநாயகன் கமலின் மகள் ஆவார். இவர் சமீபத்தில் தான் இந்த கருப்பு குடிநீரை குடிக்க இருப்பதாக மீடியாவில் கூறியிருந்தார். இது குறித்து கேள்வி கேட்டபோது ஸ்ருதிஹாசன் கூறியது, இது கருப்பு குடிநீர் இல்லை.
கார நீர். சாதாரண நல்ல குடிநீரை போலவே தான் சுவையாக இருக்கிறது என்று கூறி இருந்தார். இவரை தொடர்ந்து மலாய்கா அரோரா, தி லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி ரௌதேலா போன்ற பல பிரபலங்கள் இந்த கருப்பு குடிநீரை குடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அது மட்டும் இல்லாமல் நடிகை காஜல் அகர்வால் கூட இந்த கருப்பு குடிநீரை குடிக்கிறார். அதற்கான வீடியோவும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.