பணத்துக்கே கஷ்டப்பட்டு வரும் கமலின் இரண்டாம் மனைவி சரிகாவா இது ? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க. (முதல் மனைவி யார் தெரியுமா ? )

0
438
sruthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இதனிடையே கமலஹாசன் அவர்கள் சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை விட்டு பிரிந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் லாக் டவுன் நேரத்தில் சரிகா பட்ட கஸ்டங்களை பற்றி கூறி இருந்தது பெரும் சர்ச்சையானது. சரிகா டெல்லியை சேர்ந்தவர். கமலஹாசனின் டிக் டிக் டிக் என்ற படத்தில் சரிகா சேர்ந்து நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அந்த படத்தின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1988 ஆம் ஆண்டு நடிகை சரிகாவை கமலஹாசன் திருமணம் செய்திருந்தார்.கமலஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு பிறந்த மகள்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இப்படி ஒரு நிலையில் இருவரும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

- Advertisement -

பணத்திற்கு கஷ்டப்படும் சரிகா :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சரிகா ‘ஆரம்பத்தில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட். நான் மீண்டும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். சுமார் ஐந்து ஆண்டுகளாக நாடகங்களில் நடித்து வருகிறேன். ஒரு நாளைக்கு 2000 ரூபாய் முதல் 2700 ரூபாய் வரை தருவார்கள்.அதை வைத்து தான் கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வருகிறேன் என்று கூறி இருந்தார்.

சரிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் :

சரிகா, கமலை பிரிந்தாலும் சரிகா தன் மகளுடன் தொடர்பில் தான் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சுருதி ஹாசன் தனது அம்மா சரிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் அடையாளம் தெரியாத அளவு ஆளே மாறி இருக்கிறார் சரிகா. இது ஒருபுறம் இருக்க கமலின் முன்னாள் மனைவி கூட கமல் குறித்து பல குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
கமல் – வாணி கணபதி திருமணம்

கமலின் முதல் மனைவி :

நடிகர் கமல் 1978 ஆம் ஆண்டு வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஒரே ஆண்டில் இவர்கள் பிரிந்துவிட்டனர். கவுதமியை பிரிந்ததற்கு முந்தய ஆண்டு பேட்டி ஒன்றில் பேசிய கமல் ‘எனது முதல் மனைவி வாணி கணபதியை விவாகரத்து செய்தபோது, அவருக்கு நிறைய பணம் ஜீவனாம்சமாக தரவேண்டியிருந்தது. அதனால் பொருளாதார பாதிப்புக்கு ஆளானேன். சொந்த வீடு கூட இல்லாத நிலை” என்று கூறி இருந்தார்.

கமல் குறித்து வாணி கணபதி :

இதையடுத்து பேட்டி ஒன்றில் பேசிய கமலின் முதல் மனைவி வாணி கணபதி ‘ இந்தியாவில் விவாகரத்துக்காக தரப்படும் ஜீவனாம்சத்தால் ஒருவர் திவாலாகிவிடுவாரா? அல்லது விவாகரத்து பெற்ற பெண் வாழ்நாளெல்லாம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு அந்த ஜீவனாம்சத் தொகைதான் கிடைக்கிறதா? கமல் சொல்வதை  நம்புகிறீர்களா?  விவகாரத்துக்கு பின்னர் கமல் நான் வாழ்ந்த வீட்டில் நான் சம்பாதித்து வாங்கிய பொருட்களை கூட என்னை எடுக்கவிடவில்லை. எப்போதுமே யார் மீதாவது பழி போட முயற்சிப்பவர் என்று குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement