சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் கொரோனா வைரஸ் குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் பிரதமர் மோடி.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நோய்த்தொற்று உள்ளவர்களும், வெளிநாடு சென்று வந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் தான் நடிகை சுருதிஹாசன் வெளிநாட்டில் இருந்து வந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்தே.
இதையும் பாருங்க : இது சுத்தமான துயரம். உடல் முழுதும் வலி, நெஞ்சு கனக்கிறது. கொரானாவால் வேதனை படும் நடிகை.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் பிரதமர் மோடி. வீட்டுக்குள்ளே இருப்பதால் மக்கள் அனைவரும் தவித்து வருகின்றனர். வீட்டுக்குள் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகம் படிப்பது, பெயிண்டிங், ஜோக்ஸ், சமையல் வீடியோக்கள், டிக் டாக் என்று பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் மேகி செய்த சமையல் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் மேகி உடன் முட்டை சேர்த்து செய்து உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உங்களை நாங்கள் வெஜிடேரியன் என்று தான் நினைத்தோம். ஆனால், நீங்கள் சைவம் இல்லையா?? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இதையும் பாருங்க : தனது தந்தையின் மரணம் குறித்து வலிகளை பகிர்ந்த அமலா பால்.
தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் கமலஹாசன் ஐயங்கார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், அவரும் அசைவ உணவுகள் சாப்பிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர்.
நடிகை ஸ்ருதிஹாசன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பூஜை, சிங்கம் 3 , புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு,இந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை