விஜய் அண்ணா கூட சின்ன வயசுல நடிச்சிருக்கேன் ! அவர் கிட்ட பேசணும் – உருகும் சீரியல் நடிகை

0
2089
vijay

தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தில் நடிகர் நகைகளும் அடங்குவர். பலரும் அடிக்கடி விஜய் அண்ணாவின் தீவிர ரசிகர் நான் எனக் கூற கேள்விப்பட்டிருப்போம். அப்படி தான் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் ஆஃபீஸ் சீரியலின் ஸ்ருதி ராஜ்.

அவர் விஜயின் மாண்புமிகு மாணவன் படத்தில் அவருடன் நடித்துள்ளார். 1996ஆம் ஆண்டு எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த படம் மாண்புமிகு மாணவன். இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருந்த விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார் ஸ்ருதி ராஜ்.
sruthi rajதற்போது அவர் ஆபீஸ் என்ற சீரியலில் நடித்து வருகிறார். மாண்புமிகு மாணவன் படத்தில் விஜயுடன் நடித்தது பற்றி நினைவு கூறினார் ஸ்ருதி ராஜ்.

அந்த படத்தில் நடித்த போது அவரும் நானும் அண்ணன் தங்கையாகவே பழகினோம். அவருடைய தங்கை வித்யா இறந்தது பற்றி கண்ணீர் விட்டு என்னிடம் பேசினார். எனக்கும் அண்ணன் என்று ஒருவர் இல்லை விஜய் அண்ணனை நான் எனது அண்ணனாகவே ஏற்றுக்கொண்டேன். தற்போது அவர் மிகப்பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். அவரை சந்தித்து மீண்டும் அந்த நினைவுகளை பற்றி பேச வேண்டும், எனக் கூறினார் ஸ்ருதி ராஜ்.