தமிழ் சினிமாவில் திறமை இருந்து லக் என்ற விஷயம் அமையாமல் இருக்கும் பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை தேவையாணி சகோதரரான நகுலும் ஒருவர். நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் தான் இந்த தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும், நகுல் மனைவி வாட்டர் பர்த் என்ற முறையில் தண்ணீர் தொட்டியில் தனது பிரசவத்தை நடத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நகுல் மனைவி பிரசவத்தை விமரிசித்து பதிவு ஒன்று வைரலானது. அதில், நடிகர் நகுல் மனைவிக்கு இயற்க்கை முறை வீட்டு பிரசவம் இதனை ஒரு பாமரன் செய்திருந்தால் அரசாங்கமும் ஊடகமும் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி இருக்கும்.
பல லட்சம் மருத்துவமனைக்கு செலவு செய்து கடுமையான ஊசிகளை போட்டு கொண்டு கடும் மன அழுத்தத்தோடு பிள்ளை பெற்று எடுப்பவர்களை விட நடிகர் நகுல் குடும்பம் எடுத்த முயற்சி சிறந்தது ஒரு மருத்துவரை வைத்துக் கொண்டு வீட்டிலேயே பார்க்கப்படும் பிரசவம் பாதுகாப்பானது. அதுவே அலோபதி மருத்துவ மனையில் இருந்து வேசினேஷனில் இருந்து நமக்கான விடுதலை என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நகுல் மனைவி சுருதி, sanctum, natural birth center என்ற இடத்தில் தான் குழந்தையை பெற்றெடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தனது பிரசவம் குறித்து குறிப்பிட்டிருந்த நகுல் மனைவி, தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் தேவையான மருத்துவ உதவியுடன் தான் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.