தமிழ்ல ஏன் பெண்களை இப்படி எல்லாம் காட்றாங்க – லேகா வாஷிங்டன் ஆதங்கம்.

0
1578
Lekha
- Advertisement -

தமிழில் ஜெயம்கொண்டான், உன்னாலே உன்னாலே, கல்யாணம் சமையல் சாதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை லேகா வாஷிங்கடன். எஸ் எஸ் மியூசிக் சேனலில் கேம்பியர் ஆக இருந்தவர் லேகா. பின்பு இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் லேகாவை ஆளே காணோம். இந்நிலையில் நடிகை லேகா வாஷிங்கடன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் இடம் பல சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்கப்பட்டது. அதற்கு எல்லாம் நடிகை லேகா வாஷிங்கடன் அவர்கள் கட கட என வெகுவிரைவாக பதில் அளித்து உள்ளார். பேட்டியில் நடிகை லேகா வாஷிங்கடன் கூறியது,

-விளம்பரம்-

தமிழில் நான் குறிப்பிட்டு சொல்கிற மாதிரி படங்களில் நடித்து இருப்பது சந்தோஷம். நான் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும்நடித்து உள்ளேன். அதிலும் நான் நடித்த வேதம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும், சினிமா உலகம் இப்போது நிறைய மாறியிருக்கு. டெக்னாலஜி, மைண்ட் செட், பிஸினெஸ் விஷயங்கள் என்று எல்லாமே மாறியிருக்கு. சினிமாவில் நான் நடித்து இருந்த போது எனக்கும் பட இயக்குனருக்கும் ஒருபோதும் பிரச்சனை வந்ததில்லை.

இதையும் பாருங்க : அப்போல இருந்து விஜய்கிட்ட பேசுவது இல்லை, காரணம் இது தான் – நெப்போலியன் ஷாக்கிங் பேட்டி.

- Advertisement -

ஐடியாஸ் க்ளாஷஸ் எல்லாம் ஆனதில்லை. படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் தான் கேப்டன். அதோடு இதுவரைக்கும் செட்டில் கூட எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. பத்து வருஷங்களுக்கு முன்னால் பெண்களுக்கு சரியாக கதாபாத்திரம் இல்லை. அப்போது ஹீரோயின் என்றால் ஒரு குட் கேர்ள் என்ற இமேஜ் இருந்தது. அதுமட்டும் இல்லாமல் சினிமாவில் பெண்களை ரெண்டு விதமாக காட்டுவார்கள்.

நல்ல பெண்கள் – கெட்ட பெண்கள். ஆனால், இப்போது அது அவுட்டேட்டட் ஆகிவிட்டது. இப்போ இருக்கும் பெண்களை வீக்கா ஒண்ணும் தெரியாதவங்களா காட்ட முடியாது. அதோடு பெண்களை சும்மா செட் ப்ராபர்ட்டி மாதிரி பயன்படுத்த முடியாது என்று தன்னுடைய அனுபவங்களை கூறியுள்ளார் லேகா. லேகா அளித்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement