ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் சீமாராஜா என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் அவர்கள் சமீபத்தில் வீடியோகால் மூலம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் விஜய் குறித்து பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
அதில் நெப்போலியன் கூறியிருப்பது, போக்கிரி படத்தில் நான் பிரபுதேவாக்காக தான் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று பிரபுதேவா பிடிவாதம் பிடித்தார். அதனால் தான் நான் போக்கிரி படத்தில் நடித்தேன். அந்த படத்தில் விஜய் கூட எனக்கு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நான் இப்போது வரை அவரிடம் பேசுவது இல்லை. மேலும், அவருடைய படங்களை நான் பார்ப்பதில்லை. அதனால் அவருடைய வளர்ச்சியை பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. தெலுங்கில் மகேஷ்பாபு பண்ண ரோல் தான் போக்கிரி படத்தில் விஜய் பண்ணார்.
இதையும் பாருங்க : வனிதாவின் மூன்றாவது கணவருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகளா ? புகைப்படம் இதோ.
அந்த படமும் நல்ல வெற்றி பெற்றது. கடின உழைப்பினால் தான் விஜய் முன்னுக்கு வந்து இருக்கிறார் என்று கூறினார். ஏற்கனவே விஜய்க்கும்,நெப்போலியனுக்கு பிரச்சனை இருந்தது குறித்து சோசியல் மீடியாவில் சர்ச்சை இருந்தது. இந்த சூழ்நிலையில் நெப்போலியன் அளித்த இந்த பேட்டி உறுதி செய்து விட்டது. தற்போது நடிகர் நெப்போலியன் அவர்கள் ஹாலிவூட் படத்தில் நடித்து உள்ளார். அந்த ஹாலிவுட் படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இயக்கியுள்ள இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார். நெப்போலியனுக்கு இது இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். அடுத்த அடுத்த படத்தில் நெப்போலியன் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை என்று கூறப்படுகிறது.