விஜய் கட்சி குறித்து சிறுவன் வழங்கியிருக்கும் அறிவுரை தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அடுத்து 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.
https://twitter.com/Esalacupnamdea/status/1753420073581301850
இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. மேலும், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருந்தர்.
விஜய் அரசியல்:
பின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து இருந்தார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அதோடு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி மக்கள் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=JwLx2XCpyuo
தமிழக வெற்றி கழகம்:
பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார் விஜய். இது ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. பின் பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
விஜய் கட்சி பெயர் குறித்த விமர்சனம்:
விஜய் அரசியலுக்கு வருவதை ஒட்டி பலரும் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அவருடைய கட்சியின் பெயர் கிண்டல் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. வெற்றி கழகம்’ என்ற பெயரில் வெற்றி என்ற சொல்லுக்கும் பின்னால் ‘க்’ வர வேண்டும் என்றும், தமிழகம் என்பது வாழ வந்தவர்களுக்கு தானே தவிர தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு கிடையாது. இதனால் தமிழக வெற்றி கழகம் என்று சொல்லக்கூடாது என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

சிறுவன் சொன்ன அறிவுரை:
இந்த நிலையில் ஸ்டாலின் பாரதி என்ற சிறுவன் பேட்டியில், விஜய் அவர்கள் தன்னுடைய கட்சி பெயரை மாற்ற வேண்டும். இது தமிழகம் கிடையாது, தமிழ்நாடு. ஒரு நல்ல ஆலோசகரை வைத்து அறிக்கையில் இருக்கும் 65 பிழைகளை திருத்திக் கொண்டு கட்சி நடத்துங்கள் என்றெல்லாம் பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சிறுவன் பேசியது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏதுவாக இருக்கிறது.






