ஜெராக்ஸ், லப்பர், மிச்சர், ரகுமான் – சென்னை ஸ்லாங்கை கேலி செய்து வீடியோ – வெளுத்து வாங்கிய இயக்குனர்.

0
2015
Abhisek
- Advertisement -

ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் மாயா ஆகியோர் வெளியிட்ட வீடியோவை குறித்து தற்போது மூடர்கூடம் இயக்குனர் நவீன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மக்களின் பேச்சு மொழியைக் கிண்டல் செய்யும் விதமாக இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். அமேசான் பிரைம் இல் வெளியான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியில் அபிஷேக் டைட்டில் வின்னர் ஆவார். அபிஷேக் அவர்கள் விஜய் டிவியின் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், சமீபத்தில் மறைந்த விவேக்கின் கடைசி நிகழ்ச்சியான LOL எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியில் அபிஷேக் மற்றும் மாயா ஆகிய இருவரும் போட்டியாளராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தட்டிச் சென்றார். இந்த நிலையில் அபிஷேக் மற்றும் மாயா இருவரும் இணைந்து உருவாக்கிய சென்னை ஸ்லாங்க் பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் பாருங்க : ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம், எதுக்கு வம்புன்னு மொத்த வரியையும் செலுத்தியுள்ள விஜய் – எவ்வளவு தெரியுமா ?

அதில் ஏப்ரல் மாதத்தில் என்பதை ஆப்ரல் மாதம் என சென்னை மக்கள் பேசுவதாக ஆரம்பிக்கும் அந்த வீடியோவில் ஸ்டேஷன், ஜெராக்ஸ், சச்சின் டெண்டுல்கர், தோனி, பேப்பர், ஜீரோ உள்ளிட்ட பல வார்த்தைகளை சென்னை மக்கள் இப்படி தான் பேசுகிறார்கள் என்று கேவலப்படுத்தும் வகையில் இருவரும் காமெடி செய்து வீடியோவை போட்டுள்ளனர்.

- Advertisement -

இதை பார்த்த இயக்குனர் நவின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து நவீன் கூறியிருப்பது, இங்கிலீஷ்காரன் என்னைக்காவது வேறு மொழியை சரியாக உச்சரிக்கிரானா? அவவென் நாக்கு எப்படி பழகிருக்கோ அப்படித்தாண்டா உச்சரிப்பு வரும்.

நீங்க மொக்கயா ஒரு எக்ஸ்பிரஷன் குடுக்கறிங்கல்ல, அதுக்கு பேருதான் மேட்டுக்குடி பூஷ்வாத்தனம். எங்க ஊருல உங்களுக்கு பேரு ஊலப்பிலிமு’ என்று வெளுத்து வாங்கியிருக்கிறார். மேலும், இப்படி நவீன் இவர்களை வெளுத்து வாங்கியதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நவீனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிறரை கொச்சைப்படுத்துவது தான் நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு இவர்கள் இருப்பதால் தான் தற்போது காமெடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் வருகிறது என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மூடர் கூடம், அலாவுதீனும் அற்புத கேமராவும், அக்னி சிறகுகள் போன்ற படங்களை இயக்கியவர் நவீன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement