ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம், எதுக்கு வம்புன்னு மொத்த வரியையும் செலுத்தியுள்ள விஜய் – எவ்வளவு தெரியுமா ?

0
1093
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் இளைய தளபதியாய் திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவருடைய நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்லணும். இந்நிலையில் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மீதான வரி குறித்து எழுந்த புகாருக்கு விஜய் வரியை செலுத்தி விட்டார் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 2012ஆம் ஆண்டில் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.

-விளம்பரம்-

இந்த காரை தென் சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். அப்போது விஜய்க்கு தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த நுழைவு வரி தொகை அதிகமாக உள்ளதால் வரியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் விஜய். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நுழைவு வரி தொகையில் 20 சதவீதத்தை செலுத்திவிட்டு காரை வட்டாரப் போக்குவரத்து கழகத்தில் பதிவு செய்து கொள்ள உத்தரவிட்டது.

இதையும் பாருங்க : பெரியார் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிதாவின் கடவுள் பக்தியை கேலி செய்த கேட்ட ரசிகர். அனிதா கொடுத்த பதிலடி.

- Advertisement -

இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுப்பிரமணியம் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன் ஒரு லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை நடிகர் விஜய் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் விஜய் தரப்பு வழக்கறிஞர் கூறியது, நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த உத்தரவை மதிக்கிறோம் நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால், நீதிமன்றத்தில் அபராதம் விதித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறினார்.

மேலும் , இதுகுறித்து விமர்சனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். தனி நீதிபதியின் உத்தரவு நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் வகையில் உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை இடம்பெற்றுள்ள கருத்து நீக்க வேண்டும் என்றும் வணிகவரித்துறை எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு அதனை 7 முதல் 10 நாள்கள் செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் விஜய்யின் வழக்கறிஞர். அப்போது அரசு தரப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு கணக்கின்படி ஏற்கனவே செலுத்தியுள்ள 20% போக எஞ்சிய தொகையை செலுத்தினால் போதும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

-விளம்பரம்-

இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஏற்கனவே விஜய் செலுத்தியது போக எஞ்சியுள்ள 80 சதவீதம் வரியை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான மீதமுள்ள 80 சதவீத வரியை விஜய் செலுத்திவிட்டார்’ என்று தெரிவித்தார்.

Advertisement