பிரபல பின்னணி பாடகியான சின்மயின் குடும்பதிரினரிடம் நூதன முறையில் மோசடி நடந்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி. இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு முத்தமிட்டால் படத்தில் பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த #meetoo விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் சின்மயி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் கவிஞர் .வைரமுத்து குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சின்மயி கூறியிருந்தது, நான் வைரமுத்து அதற்கு கூறியது அனைத்தும் உண்மை. நான் சொன்னதை நினைத்து மன நிறைவாக தான் இருக்கிறேன். இனி யாரைப்பற்றியும் தேவையில்லாமல் புகழாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆரம்பத்தில் அவரைக் குறித்து டீவ்ட் போடும்போது பயந்தேன். இருந்தாலும், உண்மையை வெளியுலகிற்கு கொண்டுவர துணிச்சலுடன் செய்தேன்.

கவிஞர் வைரமுத்துவை குறித்து நான் மட்டும் புகார் அளித்ததாக சிலர் சொல்லி இருந்தார்கள். ஆனால், என்னுடன் சேர்ந்து 19 பெண்கள் அவர் மீது புகார் அளித்திருக்கிறார்கள். அது வெளியே வரவில்லை. வைரமுத்துக்கு அரசியல் பின்புலம் அதிகம் இருக்கிறது. எனக்கு பல கொலை மிரட்டல்கள் எல்லாம் வந்தது. நான் அதற்கெல்லாம் பயப்படவில்லை. அந்த அளவிற்கு அவர் நிறைய ஆட்கள் வைத்திருப்பவர்.

Advertisement

குடும்பத்தினரிடம் நூதன மோசடி:

தனது குடும்பத்தினரிடம் லட்சங்களை நூதன மோசடி செய்யப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர் OTP என்னை பகிரமலே எங்களுக்கு இது போன்று ஒன்று நடந்துள்ளது. இதில் வாங்கி கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாகவும் திருடிவிட்டனர் என்றும் தெரிவித்து இருந்தார்.

Advertisement

TNEBயில் இருந்து குறுஞ்செய்தி வருவது போல இருந்து உள்ளது அதில் வந்த லிங்கை கிளிக் செய்ததன் மூலம் கணக்கில் உள்ள பணம் முழுவதும் மயமாகி விட்டது என்றும் தெரிவித்திருந்தார். முதியவர்களை குறிவைத்தே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.       

Advertisement