உலகப் புகழ்பெற்ற சினிமா இயக்குனர்களில் ஒருவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின். இவருடைய தத்து மகள் தான் மிக்கலே . கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் அவர்களின் தத்து மகள் மிக்கலே பார்ன் ஸ்டாராக நடிக்க போவதாக அறிவித்திருந்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மிக்கலே கடந்த சனிக்கிழமை போலீசால் கைது செய்யப்பட்டு உள்ளார். குழந்தையிலேயே மிக்கலேவை ஸ்பீல்பெர்க்கும் அவருடைய மனைவி கேட் கேப்சாவ் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். மிக்கலே சுகர் ஸ்டார் என்று தனக்கு திரை பெயர் வைத்திருக்கிறார். தற்போது இவருக்கு 23 வயது தான் ஆகிறது.இவரை தவிர மொத்தம் 5 பேரை தத்து எடுத்து வளர்க்கிறார் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின்.
ஜுராசிக் பார்க் , கேட்ச் மி இப் யூ கேன், வார் ஆப் த வேர்ல்ட்ஸ், டுயல், ஈ.டி, இண்டியான ஜோன்ஸ் தொடர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். உலகம் வியக்கும் பல படைப்புகளை கொடுத்தவர். இவருடைய வளர்ப்பு மகளான மிக்கலே கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதாவது இனி நான் ஆபாச படங்களில் நடித்து தயாரித்து இயக்கப்போவதாக கூறியிருந்தார் . அவரின் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இது குறித்து அவர் கூறியது, நான் அன்றாடம் வேலை செய்து சோர்வடைந்து விட்டேன்.
ஆனால், நான் செய்த எந்த வேலையிலும் கொஞ்சம் கூட திருப்தி இல்லை. எனவே இனி நான் ஆபாச வீடியோக்களை நடித்து, தயாரிக்க விரும்புகிறேன் . இதன் மூலம் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இது தனக்கு விருப்பமான துறை என்றும், இதற்கு என் தந்தை ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார். இது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மிக்கலே தன்னுடைய 47 வயது காதலன் உடன் பாருக்கு சென்று வீடு திரும்பிய போது இவர்கள் இருவருக்குமிடையே கருத்து ஏற்பட்டுள்ளது. அதனால் கோபமடைந்த மிக்கலே தன் கையில் இருக்கும் பொருளை கொண்டு தாக்கி உள்ளார்.
இதனால் மிக்கலேவை போலீசார் டோமஸ்டிக் வயலன்ஸ் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். பின் அடுத்த நாளே போலீஸில் இருந்து மிக்கலே விடுவிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு மிக்கலே காதலன் பேட்டியில் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, மிக்கலே கைது செய்யப்பட்டது உண்மை தான். ஆனால், தவறான புரிதலால் இந்த நிகழ்வு நடந்து விட்டது. யாரு பாதிக்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும், மிக்கலே கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட காரணத்தை சொல்ல அவர் மறுத்து விட்டார்.