பேனர்களை கிழிப்பேன் என்று சவால் விட்ட சிம்பு ரசிகர்.! கைது செய்து உள்ளே ஒக்கார வைத்த போலீஸ்.!

0
1280
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டம் சிம்பு ரசிகர் மன்ற தலைவர் மச்சி மதன் என்பவர் ஒரு பெண்ணுடன் சேர்ந்து சிம்புவுக்கு ஆதரவாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த வீடியோ வைரலாக பரவியது. தற்போது அவர் கைது செய்யபட்டுள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதற்காக சிம்புவின் படத்திற்குப் பேனர் அடிக்கச் சென்ற வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் மச்சி மதன்,  டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் கடையில் புகுந்து தகராறு செய்து, அதைத் தனது கூட்டாளி மூலம் படம் பிடித்து வீடியோவாக மதன் வெளியிட்டார்.

- Advertisement -

இதுமட்டுமல்லாமல் சிம்புவின் படம் திரையிடப்படும் திரையரங்குகளில் உள்ள ரஜினியின் பேட்ட , அஜீத்தின் விஸ்வாசம் பட பேனர்களை கிழிக்க போவதாகவும் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில்  வைரலானது.

இந்நிலையில் டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் கடையில் புகுந்து தகராறு செய்த மதன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த செய்தியால் சிம்பு ரசிகர்கள் பலரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

-விளம்பரம்-


Advertisement