‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ – 7 மொழிகளில் வெளியான மாநாடு படத்தின் டீசர்.

0
2345
simbhu
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

-விளம்பரம்-

இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மாநாடு படம் மீண்டும் துவங்கியது. பின்னர் கொரோனா பிரச்சனை காரணமாக மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியது.  டிசம்பர் 24-ம் தேதி வரை இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதையும் பாருங்க : காணாமல் போய்க்கொண்டிருக்கும் லிஸ்டில் பிரசாத் ஸ்டூடியோவும் சேர வேண்டும் -புதிய ஸ்டூடியோ ஆரம்பித்த இளையராஜா பேட்டி.

- Advertisement -

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி ,மனோஜ் பாரதிராஜா, டேனியல் என்று பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள். கடந்த நவம்பர் 21 காலை 10:44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் நெத்தியில் புல்லட்டுடன், தலையில் ரத்த காயங்களுடன், மங்காத்தா அஜித் போல ஒரு செயின் மற்றும் டாலர் என்று நமாஸ் செய்து கொண்டு இருப்பது போல அந்த பாஸ்டரரில் சிம்பு கழுத்தில் ஒரு செயின் இருந்தது.

This image has an empty alt attribute; its file name is 1-125.jpg

இப்படி ஒரு நிலையில் இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை 7 மொழிகளில் வெளியிட்டுள்ளனர் படக்குழு. மாநாடு படத்தின் படப்பிடிப்புகளுக்கு நடுவே நடிகர் சிம்பு , சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த திரைப்படம் படு தோல்வியடைந்து. இதனால் மாநாடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement