14 வருடங்களுக்கு பின்னர் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிம்பு.! ஹீரோ யார் தெரியுமா.!

0
275

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு சர்ச்சைக்கு குறைவில்லாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். கடந்த சில காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாத சிம்பு அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்னர் தற்போது மாநாடு, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Related image

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்றது. மேலும், மாநாடு படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வந்த பாடில்லை. இந்த நிலையில் சிம்பு மீண்டும் இயக்குனராக அவதாரமெடுக்க உள்ளாராம்.

நடிகர் சிம்பு தானே இயக்கி தானே நடித்த திரைப்படம் மன்மதன் மற்றும் வல்லவன் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்போது 14 வருடங்களுக்கு பின்பு இயக்குனராக களமிறங்க உள்ளார் சிம்பு.

சிம்பு தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இதனை முடித்துவிட்டு மப்டி கன்னட படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் சிம்பு. இந்த படத்தில் சிம்பு ஹீரோ கிடையாதாம். மேலும், இந்த படத்தில் சந்தானம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.