வெளிநாட்டிலும் தமிழலின் புகழ்’ பாரின் தெருவுக்கு வகைப்பட்ட தன் பெயர் பலகை அருகே கெத்தாக போஸ் கொடுத்த இசைப்புயல்.

0
205
arrahman
- Advertisement -

வெளிநாட்டில் உள்ள தெருவிற்கு ஏ ஆர் ரகுமானின் பெயர் வைக்கப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகளை வாசித்துப் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார்.

-விளம்பரம்-

உண்மையிலேயே சொல்லவேண்டுமென்றால் ஏ ஆர் ரஹ்மானுக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பது தான் சிறு வயது கனவாம். ஆனால், இவர் இசையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். பின்னர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கி இருந்தார்.

- Advertisement -

ரகுமான் திரைப்பயணம்:

தனது முதல் படத்திலேயே இவர் தேசிய விருதையும் பெற்றார். அதோடு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

ரகுமான் குறித்த தகவல்:

மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் ஆஸ்கர் பெருமையையும் பெற்றவர். தற்போது உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு ஏ ஆர் ரஹ்மான் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார். இப்படி இவர் இசையில் பல சாதனைகளை புரிந்தது மட்டும் இல்லாமல் இன்னும் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாக உள்ள படம்:

தற்போது ஏ ஆர் ரகுமான் இசையில் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, விக்ரமின் கோப்ரா, மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு இசைக்கருவிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் தேடிப்பிடித்து வாங்கி அதனை பயன்படுத்தி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

தெருவிற்கு ஏ ஆர் ரகுமான் பெயர் வைத்த நாடு:

இந்த நிலையில் தெருவிற்கு ஏ ஆர் ரகுமானின் பெயரை வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தற்போது கனடா நாட்டில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை கௌரிவிக்கும் வகையில் Markham என்ற நகரத்தில் உள்ள இரண்டு தெருக்களுக்கு ரகுமானின் பெயரை வைத்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு ஒரு தெருவிற்கும், தற்போது 2022 ஆம் ஆண்டு ஒரு தெருவிற்கும் ஏ ஆர் ரகுமானின் பெயரை வைத்து கௌரவித்து உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement