ரஜினியை யார் என்று கேட்ட தூத்துக்குடி இளைஞர் தற்போது கைது.! பின்னணி என்ன ?

0
599
Rajini-who-are-you

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பார்த்து தூத்துக்குடி இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என்று கேட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்ன நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பாட்டனர். இந்த போராட்டத்தின் போது சந்தோஷ் ராஜ் என்பவர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் போராட்டத்தில் பாதிக்கபட்ட மக்களை ரஜினி நேரில் சென்று ஆறுதல் அளித்த போது சந்தோஷ் ராஜ் ரஜினியை பார்த்து யார் நீங்கள் ? என்று கேட்க ரஜினி பதில் கூற முடியாமல் அங்கிருந்து கிளம்பினார். இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கியதற்காக சந்தோஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதியபட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement