விஜய் 62வது படத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
6166
vijay

விஜய் அடுத்தாக நடிக்கும் படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் முட்டுக்காடு பகுதியில் நடந்தது.

vijay-actor

இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் பல சேஸிங் சீன்களுடன் சூட்டிங் நடந்தது. இதனை அடுத்து மீண்டும் சென்னை வந்துள்ள படக்குழு இங்குள்ள பிரபல பச்சையப்பன் கல்லூரியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இங்கு தான் சிக்கல், கடந்த இரண்டு நாட்களாக ஆக்சன் காட்சிகள் நிறைந்த சீன்களை ஷூட் செய்து வருகின்றது படக்குழு. இதனால் அங்குள்ள விடுதி மாணவர்களுக்கு ஆட்சேபனை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

vijay62

மேலும் படத்தின் சூட்டிங் மிகவும் சத்தமாக எடுக்கப்பட்டு வருவதால், அங்குள்ள மாணவர்கள் படிக்க முடியாமல் இருந்துள்ளனர். மானவர்களில் ஒரு சாரார் சூட்டிங்கை பார்த்து ரசித்த வேளையில் இன்னோரு சாரார் மிகவும் சத்தமாக இருப்பதாக கூறி சூட்டிங்கை நிறுத்து சொல்லி பேசியுள்ளனர். இதனால் அந்த கல்லூரி வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.