கண்ணருகில் வெட்டுக்காயம்.! கொட்டிய ரத்தம்.! மாநகரம் பட நடிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்.!

0
671
Sundeep-Kishan
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் ஏற்கனவே ‘யாருடா மகேஷ்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Image result for sundeep kishan managaram

கடந்த 2013 ஆம் ஆண்டு மதன் குமார் இயக்கத்தில் வெளியான ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷான். அதற்கு முன்பாகவேய தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் சந்தீப்.

- Advertisement -

தற்போது இவர் தெலுங்கில் கார்த்திக் ராஜு என்பவர் இயக்கத்தில் ‘ Ninnu Veedani Needanu Nene ‘என்ற படத்தில்நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்யா சிங் என்பவர் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது சந்தீப் கண் அருகில் இரும்பு துகள் ஒன்று தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் பொல பொலவென கொட்டியுள்ளது.

மேலும், அந்த சண்டை காட்சியில் ஈடுபட்டிருந்த ஸ்டண்ட் கலைஞருக்கும் மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்தீப் தற்போது தான் நலமாக இருப்பதாகவும், அந்த ஸ்டண்ட் கலைஞருக்கத் தான் மோசமான காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ரசிகருக்கு ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த நடிகர் சந்தீப். ஸ்ரீனுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ஸ்ரீனு தனக்கு அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் கூறியிருந்தார். மேலும், அந்த ரசிகரின் இறுதி சடங்கு செலவுகளை ஏற்றதோடுமட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் அளிப்பதாகவும் உறுதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement