புற்றுநோயால் கடும் அவதிப்படும் பிரபல திரைப்பட நடிகர் – நடிகர் சங்க உதவியை எதிர்பார்த்திருக்கும் அவலம்

0
6163
Shanmugam
- Advertisement -

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மகன் புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவிப்பது குறித்து குடும்பத்தினர் வைத்திருக்கும் உருக்கமான கோரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் சோமு. இவர் எம்ஜிஆரின் குருவாக இருந்திருக்கிறார். இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். ஒரு காலத்தில் இவருடைய சண்டை காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

-விளம்பரம்-

அதற்குப்பின் வயது மூப்பின் காரணமாக இவர் படங்களில் பணியாற்றுவதை நிறுத்திக் கொண்டார். இதனிடையே இவர் எஸ் சுப்புலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் பிரபலமான நடிகை ஆவார். இவர்களுக்கு சண்முகராஜன் என்ற மகன் இருக்கிறார். இவர் சாவி, ஊமை விழிகள், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சில திரைப்படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். பின் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதன் பின் இவர் கிடைக்கும் வேலையை செய்து கொண்டு பிழைப்பை நடித்து கொன்டு வந்தார்.

- Advertisement -

சண்முகராஜன் குடும்பம்:

இவர்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் வாடகை குடியிருப்பில் பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு நகினா ராஜ் என்ற மனைவியும், மஸ்தான் என்ற மகனும் இருக்கின்றார்கள். தற்போது இவர்களுடைய குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பொருளாதாரத்திலும் பின்தங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஸ்டண்ட் மாஸ்டரின் மகன் சண்முகராஜன் உடல்நலையால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் அவஸ்தை பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சண்முகராஜன் உடல்நிலை விவரம்:

அதாவது, சண்முகராஜனுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இவருடைய உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லை சிகிச்சை செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இன்னொரு பக்கம், சண்முகராஜனின் மகன் மஸ்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் சாலை விபத்தில் சிக்கி தன்னுடைய இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

உதவிக்கரம் கேட்ட குடும்பம்:

இப்படி கடுமையான வறுமையின் பிடியில் இந்த குடும்பம் தவித்து வருவதால் முதலமைச்சர் மு க ஸ்டாலின், நடிகர் சங்கமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று நகினா ராஜ் வேண்டுகோள் வைத்திருக்கிறார். மேலும், இது குறித்து நகினா ராஜ் கூறியிருப்பது, நடிகர் சங்கத்தில் கமிட்டி மெம்பராக இருந்தவர் எங்கள் மாமியார் எஸ் சுப்புலட்சுமி. தற்போது எங்களது குடும்பம் வறுமை குறித்து நடிகர் சங்கத்தில் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு பார்க்கலாம் என்று கூறினார்கள். தற்போது எங்கள் குடும்பம் உணவிற்கு கூட வழியில்லாமல் வாடகை கொடுக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வாழ்க்கையில் நடத்தி வருகிறது.

நகினா ராஜ் வைத்த கோரிக்கை:

கடந்த நான்கு ஆண்டுகளாக அவருக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் உதவி தொகையும் தற்போது வழங்குவதில்லை. இதுவரை எந்த உதவியும் நடிகர் சங்கத்திலிருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை. மூத்த நடிகர்கள் எங்களின் நிலைமையை உணர்ந்து உதவி செய்ய வேண்டும். எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பல்வேறு படங்களில் நடித்தவர் என் மாமனார் சோமு. அவரின் பெயரை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீதிக்கு வைத்து இருக்கிறார்கள். ஆனால், சோமுவின் மகன் தற்போது ஆதரவின்றி தவித்து வருவது வேதனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement