டாப் நடிகர்களின் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக வரும் சில்வாவின் அழகிய குடும்பம் – மகன் மற்றும் மகளின் புகைப்படம்.

0
2257
silva
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்பவர் சில்வா. இவருடைய ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இவர் விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் பெரும்பான்மையான சண்டை காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பணியாற்றி இருக்கிறார். மேலும், படங்களில் இவர் ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் மங்காத்தா, வேலாயுதம், தலைவா, ஜில்லா, பிரியாணி, அஞ்சான், என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் இவருடைய ஸ்டண்ட் காட்சிகளும், நடிப்பும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. அதிலும் அஜித் நடிப்பில் வெளியான பல திரைப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா நடித்துள்ளார். இப்படி தென்னிந்திய சினிமா உலகில் மிகச்சிறந்த சண்டை பயிற்சியாளராகவும், நடிகராகவும் உள்ள சில்வா இயக்குனராகவும் அவதாரம் எடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சில்வாவின் திரைப்பயணம்:

மேலும், சினிமா உலகில் பிரபலமாக திகழும் சில்வா அவர்கள் ஆரம்ப காலத்தில் பயங்கர கஷ்டப்பட்டு தான் சினிமா உலகில் நுழைந்தார். பல கஷ்டங்கள், அவமானங்களுக்கு பிறகு தான் சினிமாவில் இவருக்கு இந்த இடம் கிடைத்தது. இதுகுறித்து கூட சில்வா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட கூறி இருந்தால். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு காலத்தில் என்னை பார்த்தாலே பசங்க எல்லோரும் மிரளுவாங்க. ஆனால், இன்னைக்கு செல்பி எடுக்கிறார்கள். அப்போதெல்லாம் வாடா போடான்னும், இப்போது அதெல்லாம் வாங்க சார் போங்க சார் என்று இரண்டு விஷயங்களையும் அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டும் தான் இந்த சந்தோசத்தை உணரமுடியும் என்று கூறியிருந்தார்.

சில்வாவின் அழகிய குடும்பம்:

மேலும், சினிமாவில் உச்சத்தில் திகழ்ந்து கொண்டிருக்கும் சில்வாவின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமாக தான் சென்று கொண்டிருக்கின்றது. இவருடைய மனைவி மங்கையர்கரசி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவருடைய மகன் பெயர் கிருஷ்ணன், மகள் பெயர் அமிர்த ஷர்ஷினி. இவருடைய மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். மகள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். வெளியில் எவ்வளவு ஆக்ஷன் ஸ்டன்ட் பண்ணியிருந்தாலும் வீட்டில் எந்த ஒரு ஆக்ஷனும் இல்லாமல் சில்வா ஜாலியாக இருப்பாராம்.

-விளம்பரம்-

மனைவி குறித்து சில்வா சொன்னது:

இவருடைய குடும்பத்தில் எந்த ஆக்ஷனும் இல்லாமல் இருப்பதற்கும், வெளியில் ஜாலியாக அவர் ஊர் சுத்திட்டு இருப்பதற்கும் அவர் மனைவி தான் காரணம் என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் என் மனைவி என் மீது அதிக அன்பு வைத்து இருக்கிறார். அதனால் நான் அதிக வம்பு இழுத்துட்டு இருக்கிறேன். இவர்களால் தான் என்னுடைய வாழ்க்கை அழகாக இருக்கிறது என்றும் வேடிக்கையாக ஒரு முறை பேசி இருந்தார்.

சில்வாவின் குடும்ப புகைப்படம்:

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் சில்வா உடைய குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் சில்வா அவர்கள் தன் மனைவி, மகன்,மகள் உடன் இருக்கும் புகைப்படம். தற்போது இது தான் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சில்வாவிற்கு இவ்வளவு அழகிய குடும்பமா! என்று கமெண்ட்களை பதிவிட்டும் சில்வாவின் குடும்ப புகைப்படத்தை பயங்கர ட்ரெண்டிங் ஆக்கியும் வருகிறார்கள்.

Advertisement