இரண்டாம் வகுப்பிலேயே மார்க்கெட் வேலை, டாக்டர் கனவு, சினிமாவிற்குள் வந்த கதை குறித்து சொன்ன பிரபல ஸ்டன்ட் இயக்குனர் சில்வா.

0
472
stuntsilva
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்பவர் சில்வா. இவருடைய ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் பெரும்பான்மையான சண்டை காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பணியாற்றி இருக்கிறார். அதோடு இவர் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் மங்காத்தா, வேலாயுதம், தலைவா, ஜில்லா, பிரியாணி, அஞ்சான், என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் இவருடைய ஸ்டண்ட் காட்சிகளும், நடிப்பும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. அதிலும் அஜித் நடிப்பில் வெளியான பல திரைப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தென்னிந்திய சினிமா உலகில் மிகச்சிறந்த சண்டை பயிற்சியாளராகவும், நடிகராகவும் உள்ள சில்வா இயக்குனராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார்.

- Advertisement -

ஸ்டண்ட் சில்வா அளித்த பேட்டி:

இவர் சித்திரைச் செவ்வானம் படத்தின் மூலம் இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், சினிமா உலகில் பிரபலமாக திகழும் சில்வா அவர்கள் ஆரம்ப காலத்தில் பயங்கர கஷ்டப்பட்டு தான் சினிமா உலகில் நுழைந்தார். இந்நிலையில் தன்னுடைய திரையுலக பயணம் குறித்து ஸ்டண்ட் சில்வா அளித்திருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருந்தது, நான் சென்னைக்கு வந்த பிறகு தான் சினிமா பார்க்கிற பழக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வந்ததும் என்னுடைய நண்பர் ஒருவர் ஏவிஎம் தியேட்டருக்கு கூட்டிட்டு போனார்.

ஸ்டண்ட் சில்வா பார்த்த முதல் படம்:

நான் சிறு வயதில் சினிமா படமெல்லாம் பார்த்ததில்லை. ஏவிஎம் ஸ்டுடியோவில் மோகன்லால் சார் நடித்த மெட்ராஸ் மெயில் 20 என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது. மலையாள படம் என்று தெரிந்தும் திரையை பார்க்க கூச்சமாக இருந்தது. ஏன்னா, அப்போதெல்லாம் மலையாள படம் என்ற இமேஜ் வேற மாதிரி இருந்தது. ரொம்ப நேரம் திரையை பார்க்காமலேயே நடுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தேன். அதற்கு பிறகுதான் படம் பார்த்தேன். இந்த விஷயத்தை நான் மோகன்லால் சாரிடம் கூட சொன்னேன். அதுதான் என்னுடைய முதல் படம். அதைக் கேட்ட அவர் சிரித்தார்.

-விளம்பரம்-

தனிமை விரும்பி:

அதேபோல் ஹாஸ்டலில் தங்கி இருந்து படித்தேன். தனியாகத்தான் இருப்பேன். 200 பேர் இருக்கிற இடத்தில் எங்கேயாவது தனியாக ஒருத்தன் தெரிந்தால் அது நானாகத்தான் இருக்கும். யார் கூடவும் பேச மாட்டேன். ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன். சிறுவயதிலிருந்தே யாராவது என்னை மிரட்டினால் கூட நான் பயந்து விடுவேன். தனிமை விரும்பியாக இருந்தேன். என்னை சுற்றி நடக்கும் விஷயங்களை எல்லாம் கவனித்து கொண்டே இருப்பேன். இப்பவும் அப்படித்தான் இருக்கிறேன். இரண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஒரு வேலை செய்ய மாட்டேன்.

சில்வா செய்த வேலைகள்:

கிடைக்கும் வேலையெல்லாம் செய்து கொண்டு பல விஷயங்களை கற்றுக்கொள்ள நினைப்பேன். காலையில் ஒரு வேலை , மதியம் ஒரு வேலை , மாலை ஒருவேலை என்று தெரிந்த வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு டாக்டர் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், படிக்கவில்லை. பத்தாம் வகுப்பு வரை தான் படித்தேன். ஐடிஐ கோர்ஸ் முடித்தேன். ஆனால், சம்பந்தமே இல்லாமல் ஆஸ்பிட்டலில் வார்டு பாய் வேலைக்கு சேர்ந்தேன். அங்கிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டு ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் போய் நர்சிங் கோர்ஸ் படிக்க ஆரம்பித்தேன்.

சில்வா வாங்கிய முதல் சம்பளம்:

அந்த வேலையில் சம்பளம் பத்தவில்லை என்று தான் சினிமா தொழிலுக்கு வந்தேன். நடனம் ஆடலாம் என்று முயற்சி செய்தேன். அந்த வேலை கிடைக்காதனால் தான் சண்டை பக்கம் சென்றேன். 90களில் எனக்கு 375 ரூபாய்தான் மாத சம்பளமாக கிடைத்தது. அப்ப நான் அவ்வளவு சந்தோஷமாக இருந்தேன். தினம் தினம் புது மனிதர்களை சந்திக்க வாழ்க்கை அழகாக போய்க்கொண்டிருக்கிறது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement