பேனர் விழுந்து உயிரிழந்த மாணவி.! வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.!

0
7104
subashree

சென்னையில் திருமண விழாவிற்காக சாலைகளில் செல்ல முடியாத அளவிற்கு பேனர்களை வைத்ததால் பரிதாபமாக இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியையும் மேலும் அரசாங்கத்தின் மீது கோபத்தையும் ஏற்படுத்துகிறது. சென்னையிலுள்ள குரோம்பேட்டையில் உள்ள பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் பொறியியல் துறையில் பி.டெக். படிப்பை முடித்த ஒரு பட்டதாரி. சுபஸ்ரீ பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.அவர் தினமும் தன்னுடைய கம்பெனிக்கு ஸ்கூட்டியில் தான் செல்வார் அப்படி வழக்கம்போல் வேலைக்கு சென்று முடித்துவிட்டு மதியம் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் சுபஸ்ரீ.

அப்போது அவர் பள்ளிக்கரணை வழியாக பல்லாவரம் சாலையில் சென்று போது சாலையின் உள்ள மீடியன் நெடுக, காஞ்சிபுரத்து கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளரும் ,பள்ளிக்கரணையில் முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான ஜெயகோபால் மகன் திருமண வரவேற்புகள் நிகழ்ச்சிகள் குறித்து பேனர்களும், கட்சிக் கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன. இதில் பேனர்களை சாலையில் வண்டிகள் செல்லும் வழியில் வைத்திருந்தார்கள். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும் சுபஸ்ரீ அந்த வழியாக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால் அவர் நிலை தடுமாறி வண்டியிலிருந்து கீழே விழுந்தா.ர் இதை கவனிக்காமல் வந்த தண்ணிர் லாரி அவர் மீது ஏறி சென்றது. இதனால் சுபஸ்ரீ லாரியின் சக்கரத்திற்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார். மேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.உடனடியாக இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்மேலும் இதற்கு காரணம் லாரி ஓட்டுனர் மனோஜ் தான் என்று அவரை கைது செய்தார்கள். சுபஸ்ரீ கணவனான கனடா செல்வதற்கான தேர்வு எழுதிவிட்டு வரும் போதுதான் இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

- Advertisement -

சுபஸ்ரீ அவருடைய பெற்றோர்களுக்கு ஒரே மகளாவார். இந்த கோர சம்பவம் கோர சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதுகுறித்து பேனர் தொடர்பாக எந்த அரசியல் கட்சிகாரர்களையும் கைது செய்யவில்லை. மேலும் மரணத்திற்கு காரணமான லாரி ஓட்டுநரை மட்டும் கைது செய்து வழக்கு தொடுத்தார்கள். மரணத்திற்கு மூலகாரணமான பேனர் வைத்த அரசியல்வாதிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள உயர் நீதிமன்றம் பொதுமக்களை பாதிக்கும் வகையில் பேனர்கள் வைத்தால் கடுமையாக தண்டனை வழங்கப்படும் என்றும் விதிகளை மீறி அதுவும் அனுமதியின்றி பேனர் வைத்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அத்துடன் 6 மாதம் சிறை தண்டனையும் என்று உத்தரவிட்டார்கள்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் பேனர்கள் வைக்க அனுமதி வாங்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து அதற்காக நிறைய விதிகளை கொண்டு வந்தோம். ஒருசில மக்களின் அலட்சியத்தால் தான் இந்த விபரீதம் நடக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.அப்படி அவர்கள் அனுமதி பெற்ற பின் பேனர்களை வைத்தார்கள் சில கோட்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று கூறினார்கள்.பேனர்களுக்கு கீழ் அனுமதி பெற்ற விவரம்,அனுமதி எண் மற்றும் எந்த அளவிற்கு பேனர்களை வைக்க வேண்டும், அதற்கான கால அவகாசம் எவ்வளவு நேரத்தில் வைக்க வேண்டும் என்று பல விதிகளை வைத்திருந்தார்கள்.மேலும் அதுமட்டுமில்லாமல் அனுமதி இன்றி பேனர்கள் அச்சடித்து பட்டால் அச்சகத்தின் உரிமையும் ரத்து செய்யப்படும் என்று சீல் வைக்கப்படும் என்றும் உயர்நீதி மாநகராட்சி எச்சரித்தது ஆனால் ஒரு திட்டம் அறிவித்தால் இதை அரசியல்வாதிகளும் அரசாங்கமும் கடைசிவரை கடைப்பிடிப்பது தான் அரசாங்கத்தின் வேலை அதிகாரிகளின் கடமை.

-விளம்பரம்-

ஆனால், அவர்களின் அலட்சியத்தாலும் அரசியல்வாதிகளின் செல்வாக்கினாலும் காவல்துறையின் கவனக்குறைவால் தான் இந்த இளம்பெண் சுபஸ்ரீ உயிர் அநியாயமாகப் பறிபோனது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் தமிழக மக்கள். இந்த பேனர் குறித்து சம்பந்தப்பட்ட ஆட்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement