தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுவாதி. இவர் தமிழில் இயக்குனர் சசி குமார் இயக்கத்தில் 2008 ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம் ‘ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சுவாதி. அந்த படத்திற்கு நடிகை தமிழில் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன்,கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை ஸ்வாதி ரெட்டி அவர்கள் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர். மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெங்லுகு, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் நடிகை ஸ்வாதி ரெட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
பின் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை ஸ்வாதி அவர்கள் இந்தோனேசியாவை சேர்ந்த விகாஸ் என்ற நபரை தான் திருமணம் செய்து கொண்டார். விகாஸ் அவர்கள் ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு அவர் ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். புதிய தெலுங்கு படத்தில் நடிக்க சுவாதி ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் சுவாதி பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன. திருமணத்திற்கு பின் இந்தோனேசியாவில் குடியேறிய ஸ்வாதி சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பி இருந்தார்.