குஷ்பூ வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா ? – கலங்க வைக்கும் சம்பவம் .!

0
3620
kushboo

மும்பையில் பிறந்தாலும் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் குஷ்பூ. 80களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் வாழக்கையில் பல சோகங்களை கடந்த தற்போது ஒரு அரசியல்வாதியாக இருக்கிறார்.

1986ல் குஷ்புவின் அப்பா இவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். வெளியே சென்று கை நிறைய சம்பாரித்து கொண்டு வா என அவரது அப்பா குஷ்பூவை துரத்திவிட்டுள்ளார்.

அப்போது வைராக்யமாக தனது அம்மா மற்றும் தம்பியை அழைத்துக்கொண்டு இனி எப்போதும் உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன் என வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த சோகமான சம்பவத்தை 32 வருடம் கழித்து தற்போது வெளியே கூறியுள்ளார் குஷ்பூ.

மேலும், இத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த சபதத்தை இன்னும் கடைபிடித்து வைராக்யமாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார் குஷ்பூ