போலீசை பத்தி வீடியோ போட்ட. வீடீயோவால் வந்த மிரட்டல் – ஆதாரத்தை வெளியிட்ட சுச்சி.

0
1495
suchi
- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை, மகன் மரணம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்து இருந்த காரணத்தினால் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்ஸை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. பின் போலிசார் இரவு முழுவதும் அவர்கள் இருவரையும் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உள்ளார்கள். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. மேலும், சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளது. இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து பலரும் தங்களுடைய கருத்துகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
https://twitter.com/suchi_mirchi/status/1276218996602228737

ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணத்துக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது சினிமா துறையில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வரும் சுசித்ரா அவர்கள் இவர்களின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு வீடியோ பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இவர்கள் இருவரும் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள். முதலில் போலீஸ் தன்னுடைய லத்தியால் அவருடைய முழங்காலை முற்றிலும் சேதப்படுத்தியுள்ளார்கள்.

- Advertisement -

அடுத்து அவர்களின் முகங்கள் பல முறை சுவற்றில் மூட்டப்பட்டுள்ளது. பின் அவர்கள் இருவரையும் முழுமையாக நிர்வாணப்படுத்தி உள்ளாடைகள் கூட இல்லாமல் லாக்கப்பில் தள்ளி உள்ளனர். அவர்கள் இருவரையும் முழுமையாக நிர்வாணப்படுத்தி அவர்களின் ஆசனவாய் வழியாக லத்தியை உள்ளே செலுத்தி துன்புறுத்தியுள்ளனர். இம்மாதிரியாக பலமுறை அவர்களை துன்பப்படுத்தி உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரையும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதியில் கொண்டு போய் தான் இந்த சித்திரவதை செய்துள்ளனர். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் அவர்களுடைய இருவரின் பிறப்புறுப்புகளும் முற்றிலும் சேதம் பட்டுள்ளது.

அவர்களின் நெஞ்சு முடிகளையும் கைகளாலேயே பிடுங்கி உள்ளனர். இந்த சித்திரவதை எல்லாம் செய்யும்போது அவர்களின் உடல் முழுவதும் ரத்தம் வழிந்து இருந்தது. பின் போலீஸ் மூன்று முறை அவர்களுடைய துணியை மாற்றிய பிறகு தான் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். கஸ்டடியில் எடுத்து இவர்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்கள். போலீசார் அவரை கஸ்டடியில் கொண்டு வந்துள்ளனர். கஸ்டடியில் வைத்து இரண்டு நாட்களுக்கு பின் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளார்கள். இவர்கள் உயிரிழந்ததற்கு காரணம் ஒருவருக்கு நெஞ்சுவலி என்றும், மற்றவருக்கு காய்ச்சல் என்றும் கூறியுள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த சம்பவத்தை செய்த இரண்டு போலீஸையும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள். காவல் நிலையத்தில் பணிபுரிந்த மற்ற போலீசையும் பணியிடை மாற்றம் செய்துள்ளனர். இது ஒன்றும் அவர்களுக்கான தண்டனை கிடையாது. இருவருக்கும் சரியான நீதி கிடைக்க வேண்டும். அதனால் தான் இந்த வீடியோ. நீங்களும் இவர்களுக்கு நீதி கிடைக்க உதவி செய்யுங்கள் என்று சுசித்ரா கூறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement