வீட்டிற்கு அழைத்த வைரமுத்து, பாட்டியுடன் சென்ற சுச்சி – கடைசியில் நடந்த கூத்து

0
324
- Advertisement -

வைரமுத்து குறித்து பாடகி சுசித்ரா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சுசித்ரா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையே இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி, கார்த்திக் குமார் போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை ‘சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியாக்கி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார் சுசித்ரா.

-விளம்பரம்-

இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. பின் கடந்த சில மாதங்களாக பாடகி சுசித்ரா அளித்து இருக்கும் பேட்டிதான் இணையத்தில் சர்ச்சையாகி இருந்தது. குறிப்பாக இவர், என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தை கொடுத்து என்னைப் பற்றி தவறாக பேசி வருகிறார். அவரும் தனுஷும் சேர்ந்து குடித்துவிட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்தேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியும்.

- Advertisement -

சுசித்ரா குறித்த தகவல்:

அதேபோல், திருமணம் ஆகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது விட்டது என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் குமார், சுசித்ரா மீது புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ரா, வைரமுத்து எல்லா பாடகிகளிடமும் தவறாகத்தான் பேசியிருக்கிறார். என்னிடமும் அவர் அப்படிதான் பேசினார். அவர் என்னுடைய பாடலை கேட்டு, உன்னுடைய குரலில் காமம் இருக்கும்மா, உன் குரல் மேலே எனக்கு ஒரே காதல் வருதும்மா என்றெல்லாம் பேசுவார்.

சுசித்ரா பேட்டி:

ஒரு நாள் என்னை வீட்டுக்கு வாம்மா, உனக்கு பரிசு கொடுக்கணும் என்று சொன்னார். நானும் என்னுடைய பாட்டியை அழைத்துக் கொண்டு போயிருந்தேன். அவர் என் பாட்டியை பார்த்த உடனே ஷாக் ஆகிவிட்டார். பின் நீங்க தனியா வர மாட்டீங்களா? என்று கேட்டார். அதற்கு நான், எங்கு போனாலும் என்னுடைய பாட்டியை கூட்டிக்கொண்டு தான் போவேன் என்று சொன்னேன். அதோடு என்னுடைய பாட்டி தான் அதிகமாக வைரமுத்துவிடம் பேசியிருந்தார். அப்போது என்னுடைய பாட்டி வைரமுத்துவிடம், என் பேத்திக்கு நீங்க தந்தை மாதிரி. நீங்க தான் அவர்களை போன்ற சின்ன பெண்களை எல்லாம் வளர்த்து விடனும் என்றெல்லாம் சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

வைரமுத்து குறித்து சொன்னது:

உடனே அவருக்கு ஒரு மாதிரி ஆகி வியர்வையாக ஊத்தியது. பின் என் பாட்டி, ஏதோ பரிசு கொடுக்கனும் என்று சொன்னீர்களே? என்று கேட்டதற்கு அவர் பேண்டின் ஷாம்பு, கண்டிஷனர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பின்பு என்னுடைய கையை பிடித்து, நீ என் கூட வா என்றெல்லாம் ஒரு மாதிரியா நடந்து கொண்டார். நான் உடனடியாக அங்கிருந்து வந்து விட்டேன். அதற்கு பிறகு எனக்கு போன் செய்து பண்ணை வீட்டுக்கு வா, உன் கூட பேசணும் என்றெல்லாம் பேசியிருந்தார்.

சின்மயி குறித்து சொன்னது:

நான் உடனே போனையும் கட் பண்ணி விட்டேன். இந்த மாதிரி இவர் பாட வரும் பெண்களிடம் நடந்திருக்கிறார். சின்மயி விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. அவர் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை தான். அவர் தனியாக போராடி வருகிறார். இதை அவர் தனியாகத்தான் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். இப்போது ஹேமா கமிட்டி வந்த பிறகு பிரபலங்கள் பலரும் பேசுகிறார்கள். சின்மயிக்கு அவர்கள் ஆதரவாக பேசவில்லை. என்னை கூப்பிட்டு இருந்தால் நான் கண்டிப்பாக சின்மயிக்கு ஆதரவாக பேசியிருப்பேன். ஆனால், சின்மயிக்கு என்னை பிடிக்காது என்று பேசி இருக்கிறார்.

Advertisement