விஜய் ஆண்டனி மகள் இழப்பிற்கு காரணம் என்ன தெரியுமா? சுசித்ரா கிளப்பிய அடுத்த சர்ச்சை

0
411
- Advertisement -

கடந்த சில வாரங்களாகவே சுசித்ரா-கார்த்திக் குமார் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் சுசித்ரா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ரா, என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தைக் கொடுத்து என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார்.

- Advertisement -

சுசித்ரா குறித்த சர்ச்சை:

அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும். அதேபோல் எனக்கு திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதற்கு கார்த்திக் குமாரும் பதிலடி கொடுத்து வருகிறார். இருந்தாலும், தொடர்ந்து சுசித்ரா அவர்கள் பேட்டி அளித்து வருகிறார். அதில் அவர், தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா போன்ற பிரபல நடிகைகளை குறித்து பல சர்ச்சையான கருத்துக்களையும் கூறி இருக்கிறார்.

சுசித்ரா பேட்டி:

தற்போது சோசியல் மீடியாவில் சுசித்ரா விவகாரம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது.இப்படி இவர் அளித்த பேட்டி சர்ச்சை ஓய்வதற்குள் மீண்டும் சுசித்ரா அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர், விஜய் ஆண்டனி படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். அதற்குப் பிறகு தான் அவர் ஸ்டைலாக மாறினார். இதேபோல பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய தோற்றத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவருடைய மகள் மீரா விரும்பினார்.

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி மகள் குறித்து சொன்னது:

இது குறித்து விஜய் ஆண்டனி இடம் பலமுறை மீரா கூறியிருக்கிறார். மீரா சொல்லும் போதெல்லாம் விஜய் ஆண்டனி ஒரு சில நாடுகளின் உடைய பெயர்களை சொல்லி கண்டிப்பாக கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சமாதானம் செய்திருக்கிறார். மீராவுக்கு அப்போது 18 வயது கூட இல்லை. இது குறித்து பலமுறை பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கோபமடைந்த விஜய் ஆண்டனி ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தட்டை தூக்கி எறிந்து பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.

மீரா தற்கொலை செய்ய காரணம்:

விஜய் ஆண்டனி சொன்னதைக் கேட்டு மனம் நொந்து போன மீரா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் பலரும் சுசித்ராவை திட்டி வருகிறார்கள். இதற்கு விஜய் ஆண்டனி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடந்த ஆண்டு விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார். அப்போது இவருக்கு 16 வயது தான். மீராவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியிருந்தார்கள்.

Advertisement