நடிகர் ரவி மோகன்-ஆர்த்தி விவகாரம் தொடர்பாக பாடகி சுசித்ரா அளித்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி மோகன் சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.

இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. அதன் பின் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
ரவிமோகன்-ஆர்த்தி சர்ச்சை:
இப்படி சர்ச்சைகள் வந்து இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் ரவி-கெனிஷா இருவருமே ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்று இருந்தார்கள். இதை அடுத்து ஆர்த்தி ரவி தன்னுடைய மகன்களோடு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து எமோஷனலாக பதிவு ஒன்று போட்டு இருந்தார். இதை எடுத்து நடிகர் ரவி மோகன், ஆர்த்தி எப்போதும் எனக்கு முன்னாள் மனைவி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. என் குழந்தைகளை நான் கவனிக்கவில்லை என்று சொல்வது முற்றிலுமே தவறு. என் குழந்தைகளை நெருங்க கூட விடுவதில்லை. என் பொறுமைக்கும் எல்லை உண்டு.

சுசித்ரா பேட்டி:
என் தரப்பு நியாயம் எல்லோருக்குமே புரியும். கெனிஷாவை பற்றி தேவையில்லாமல் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அவர் என் உயிரை காக்க வந்த தோழி என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி இவர் பேசியதை அடுத்து ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இப்படி மாற்றி மாற்றி இருவர் தரப்பிலும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக பாடகி சுசித்ரா அளித்த பேட்டியில், ரவி-ஆர்த்தி விவாகரத்திற்கு காரணமே நடிகர் தனுஷ் தான். ஆர்த்தி திருமணத்திற்கு முன்பு ரவியை காதலிக்கும் வரை வேறு ஒரு பெண்ணாக இருந்தார்.

ஆர்த்தி பற்றி சொன்னது:
திருமணத்திற்கு பின்பு ஆர்த்தி அப்படியே மாறிவிட்டார். ரவி சூட்டிங் போன பின்னர் ஆர்த்தி பார்ட்டிக்கு தான் போவார். அப்படி பார்ட்டிக்கு போனபோதுதான் தனுஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு இருவருமே நெருக்கமானவர்கள். இந்த விஷயம் ரவிக்கு தெரிந்த பின்னர் தான் ஆர்த்தியை விட்டு பிரிய ஆரம்பித்தார். தற்போது ஆர்த்தி தன்னுடைய மகன்களை வைத்து ரவியை பிளாக்மெயில் செய்து வருகிறார். சமீபத்தில் கூட ரவி தன்னுடைய அறிக்கையில், ஆர்த்தியை தான் பிரிய முடிவு செய்தேன். என் மகன்களை இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார்.

ரவி நிலைமை:
தன்னுடைய மகன்களை ஆர்த்தி பார்க்க விடுவதில்லை என்பதால் ரவி பள்ளிக்கு சென்று பார்க்க முயற்சிக்கிறார். இதை அறிந்த ஆர்த்தி, தன் பாடிகார்டுகளுடனே தன்னுடைய மகன்களை பள்ளிக்கு அனுப்பி வருகிறார். இருந்தாலுமே ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு மக்கள் மத்தியில் அனுதாபம் தேட முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல youtube சேனல்களுக்கு காசு கொடுத்து ரவி-கெனிஷா பற்றி அவதூறு பரப்பி வருகிறார். கெனிஷா அப்பாவி. ரவி-கெனிஷா இருவருமே ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். ரவி- ஆர்த்தி பிரிந்ததற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறி இருக்கிறார்.






