பிரபல பாடகி சுசித்ரா, தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சுசித்ரா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையே இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி, கார்த்திக் குமார் போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் சுசித்ரா. இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலுமே, தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது வரை சுசித்ரா- கார்த்திக் குமார் பிரச்சனைக்கு முடிவு இல்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கிறது.
பிக் பாஸ் 8:
இது ஒருபக்கம் இருக்க, இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. தமிழில் பிரமாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விளங்குவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

பிக் பாஸ் 8 விஜய் சேதுபதி:
அதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், விரைவில் அவரை வைத்து ப்ரோமோ சூட்டிங் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் சேனல் தரப்பில் இருந்து எதுவும் வெளியாகவில்லை.
சுசித்ரா வீடியோ:
மேலும், இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதில் சுசித்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் பெயரும் அடிபட்டது நாம் அறிந்ததே. தற்போது அதனைக் குறித்து தான் சுசித்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 ஓட ஹோஸ்ட்டா. 8 என்று நம்பர் வந்தாலே அந்த பக்கம் போக கொஞ்சம் தயங்கினுமே.
Enna daw Nadakudhu Inga 🤔#Biggbosstamil8 pic.twitter.com/4oXqAl1W27
— Joe Michael Praveen (@RazzmatazzJoe) August 24, 2024
கார்த்திக் குமார் குறித்து:
மேலும், பிக் பாஸ் 8 போட்டியாளர்களின் லிஸ்டில் கார்த்திக் குமார் பெயர் இருக்கிறதா. ஆனால், கார்த்திக் குமாருக்கு விஜய் சேதுபதி பிடிக்காதே என்று அந்த வீடியோவில், I Hate Vijay Sethupathi என்று கார்த்திக் குமார் கூறிய நிகழ்ச்சியின் Thumbnail ஒன்றை இணைத்து கொளுத்தி போட்டு உள்ளார் சுசித்ரா. தற்போது மீண்டும் கார்த்தி குமாரை, சுசித்ரா வம்புக்கு இழுத்திருக்கும் இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






