தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது.ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் சுதா கொங்கரா பெற்றுள்ளார் என்ற செய்தி வைரலாக பரவியது.

இதையும் பாருங்க : அயன் படத்தில் சூர்யா போட்ட லேடி டிரஸ் இந்த நடிகை இந்த படத்தில் போட்ட அதே டிரஸ் தான்.

Advertisement

தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டது.பி அதே போல இயக்குனர் சுதா தயாரிப்பாளரிடம் கதை சொன்னார் என்றும் பின்னர் அவர்கள் விஜயிடம் கதை சொல்ல அனுப்பி வைத்ததும் அவருக்கும் கதை பிடித்துப்போக விஜய்யும் ஓகே சொல்லி விட்டார் என்ற செய்திகள் எல்லாம் உலா வர துவங்கிவிட்டது.

இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் சமீபத்தில் சுதா கொங்கரா டுவிட்டரில் ஜூன் 22 ஆம் தேதி (அதாவது விஜய் பிறந்த நாளன்று) தனது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றும் சமூக வளைத்தளத்தில் வைரலானது. இதனால் விஜய் 65 படத்தின் இயக்குனர் சுதா தான் என்று ரசிகர்களும் உறுதி செய்துவிட்டனர்.

Advertisement

இந்த நிலையில் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் மண் அள்ளி போடும் வகையில் சுதா, சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். ஹாய், நான் ட்விட்டர் அல்லது எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. நான் அதைப் பெறும்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். . எனவே போலி ஐடியை தயவுசெய்து புறக்கணித்து, அதைப் பின்பற்றி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள், நீங்கள் விரும்புவதையும் வீட்டிலிருந்து என்ன செய்ய முடியும் அதே செய்யுங்கள். இந்த அழிவுகரமான வைரஸில் இருந்து அனைவரும் மீண்டு வர எதிர்நோக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement