ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியை ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் கடந்த 29ஆம் தேதி வெளியாகி இருந்தது. மேலும், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது இந்த படத்தில் வசந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.
அந்த நபர் வேறு யாரும் இல்லை நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்த சிறுவன் தான் அது. அந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு சிறுவனை கடத்துவது போன்ற ஒரு காட்சி அமைக்கபட்டிருக்கும்.
அந்த காட்சியில் முட்டை போண்டா போல நடித்த சிறுவன் தான் தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்துள்ளார். தற்போது அந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.