தமிழ் நாட்ல 10 நாள் தான் ஷூட் பண்ணாங்க, மீதி எல்லாம் இங்க தான், எனவே இது உங்க படம் – சுஹாஷினி பேச்சால் எழுந்த சர்ச்சை.

0
219
suhashini
- Advertisement -

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க பலர் முயற்சித்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார்.மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படக்குழுவினர் ஆந்திரா, கேரளா என்று பல மாநிலங்களிலில் தீவீர ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பொன்னியின் செல்வன் தெலுகு ப்ரோமஷண் நிகழ்ச்சியில் மணிரத்னம் மனைவி பேசிய வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

நடிகை சுகாசினி உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் குடும்ப உறுப்பினர் . நடிகை சுகாசினி 80 தொடக்கங்களில் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடா பல பழமொழிகளில் சிறந்த நடிகையாக நடித்து வந்தார் இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்தினம் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர் சில நாட்களுக்கு முன்பு பதிவிட்ட பதிவு ஏற்கனவே ஒரு சர்ச்சையானது.

-விளம்பரம்-

அவர் சோசியல் மீடியாவில் ஒரு பதிவிட்டிருந்தார் இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அவருடன் நாம் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். தொடர்ந்து பலரும் பல வகையான விமர்சனங்களை நடிகை மீது விமர்சித்து வருகின்றன. தொடர்ந்து தனது கணவர் இயக்கம் படமான பொன்னியின் செல்வன் குறித்து புதிய ஒரு சர்ச்சை கிளப்பியுள்ளார்.

பொன்னியின் செல்வன் பட குழுவினர் ஹைட்ரபாத்திற்கு ப்ரமோஷன் சென்ற பொழுது நடிகை சுகாசினி கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியது பொன்னின் செல்வன் திரைக்கதை தமிழ் திரைக்கதை என்றாலும் இப்படத்தின் சூட்டிங் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகம் நடந்துள்ளது தமிழ்நாட்டில் வெறும் பத்து நாட்களை நடந்துள்ளது எனவே இப்படம் உங்கள் படம் இப்படம் தெலுங்கு மக்களின் படம் இப்படத்தை நீங்கதான் வெற்றியடை செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement