ரோட்டில் வாக்கிங் சென்ற நடிகையின் அக்காவிடம் காரில் ரூட் விட்டுள்ள ரஜினி – கமல் பெயரை சொன்னதும் செய்துள்ள செயல்.

0
836
Rajini
- Advertisement -

நடிகை சுகாசினியின் அக்காவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூட் விட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது . தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஹாசினி. தற்போது இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், தொகுப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர் சாருஹாசனின் மகள் அவர். மேலும், இவரது அப்பாவின் சகோதரர் உலக நாயகன் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அதோடு இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழும் மணிரத்தினத்தின் மனைவி ஆவார். மேலும், நடிகை சுஹாசினி தமிழ் சினிமாவில் “நெஞ்சத்தை கிள்ளாதே” என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகினார். இவர் அதற்க்கு முன்பே உதிர் பூக்கள், காளி , ஜானி போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார். பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சுஹாசினி திரைப்பயணம்:

குறிப்பாக, நடிகை சுஹாசினி 2003ஆம் ஆண்டு வெளியான “stumble” என்ற ஆங்கில படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்த வந்த சுஹாசினி 80ஸ் களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது கூட மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

நிகழ்ச்சியில் சுஹாசினி சொன்னது:

மேலும், இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல நிகச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சுஹாசினி அவர்கள் பிரபலங்களை வைத்து ஒரு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் சுகாசினி ரஜினிகாந்த் குறித்து கூறியிருந்தது, நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அக்கா அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். என்னுடைய அக்கா ரொம்ப அழகாக இருப்பார்.

-விளம்பரம்-

ரஜினி குறித்து சொன்னது:

நானும் என்னுடைய அக்காவும் பார்க்கிற்கு நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அதனால் ஒரு நாள் நாங்கள் இருவரும் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் திடீரென்று ஒரு கார் எங்கள் பக்கத்தில் வந்து நின்றது. அந்த கண்ணாடியை இறக்கி ஒரு ஆள் லிப்ட் ஏதாவது வேண்டுமா? என்று கேட்டார். அவர் தான் நடிகர் ரஜினிகாந்த். உடனே நான், கமலஹாசனின் அண்ணன் பொண்ணு என்று சொன்னேன். அதைக் கேட்டதுமே ரஜினி காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் என்று கூறி இருக்கிறார்.

ரஜினி திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்திருந்த அண்ணாத்த படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் கோடிகளை வாரி குவித்து இருந்தது. இதனை அடுத்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement