நான் முரட்டுத்தனமாக இருப்பதற்கு இது தான் காரணம்- சுஜா வருணியின் ஆதங்கம்

0
208
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஜா வருணி. இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். அந்த வகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து இருந்தார். அதை தொடர்ந்து சுஜா வருணி இரண்டாவது சீசனிலும் விருந்தினராக சில நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், வித்தியாசமான கான்செப்டில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் சுஜா வருணி கலந்து இருந்தார். இருந்தும், இவர் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்திலேயே எவிக்ஷன் ஆகி வெளியேறி இருந்தார். இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கும் திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார்.

- Advertisement -

சுஜா திருமணம்:

அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற சில தமிழ் படங்களில் சிவகுமார் நடித்து இருந்தார். இருந்தும் இவரால் சினிமாவில் கொடி கட்டி பறக்க முடியவில்லை. பின் சுஜா-சிவா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சுஜா படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. மேலும், இவர் தன் கணவருடன் சேர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பிபி 2 ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

சுஜா குறித்த தகவல்:

இதில் சுஜா-சிவா நடனம் வேற லெவெலில் இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். இருந்தும் இவருக்கு சரியாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் இவர் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

-விளம்பரம்-

சுஜா வருணி பேட்டி:

இன்னொரு பக்கம், இவர் யூடியூபில் தனியாக சேனல் தொடங்கி வீடியோ பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தந்த பேட்டியில் சுஜா, நாங்க மொத்தம் மூன்று பெண் குழந்தைகள். அம்மாவுக்கும் எங்களுக்கும் சோறு போட முடியாமல் என்னுடைய அப்பா விட்டுட்டு போய்விட்டார்.

அம்மா குறித்து சொன்னது:

என்னுடைய அம்மா டீ, போண்டா, வடை எல்லாம் வித்து ரொம்பவே கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். அதனால் தான் அப்போ எனக்கு ஆம்பளையை கண்டாலே பிடிக்காது. நான் இப்படி ரப் ஆண்ட டப்பாகவும் முரட்டுத்தனமாகவும் இருப்பதற்கு அது தான் காரணம். அது எங்களை பாதுகாத்துக் கொள்ள நான் போட்ட வேஷம். சின்ன வயசிலிருந்தே நிறைய கஷ்டங்களை பார்த்து பார்த்து நான் அந்த மாதிரி மாறிவிட்டேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement