ஜூலி மீண்டும் நுழைந்ததிலிருந்தே, ஜூலிக்கும் சுஜாவிற்கும் வாக்குவாதம் தொடங்கிவிட்டது, சின்ன அளவில் இருந்த வாக்குவாதம் நேற்று முதல் அதிகமாக தொடங்கி விட்டது.
நேற்று ஜூலியை சராமாறி கேளிவிகளால் துளைத்து எடுத்தார் சுஜா. சுஜாவின் பல கேள்விகள் நியாயமாகவே இருந்தன, ஜூலியிடம் உண்மை இல்லை என்பது அவரின் பதில்களில் தெரிந்தது.
இன்றய முன்னோட்ட வீடியோவில் இன்று விருது வழங்கும் விழா நடக்கிறது, அதில் ‘நாடகக்காரி’ என்ற விருதை ஜூலி சுஜாவிற்கு வழங்குகிறார். இதை ஒரு பெரிய நாடகக்காரியிடம் வாங்குவதில் சந்தோசம் என்று சுஜா கூறுகிறார், அதன் பிறகு இனிமேல் தான் என் நாடகத்தை பார்க்க போறீங்க என்றும் சுஜா கூறுகிறார்.
இவர்களுக்கு இடையிலான மோதல் இந்த வாரம் நிச்சயம் அதிகரிக்கும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
ஒவியவாய் உள்வாங்கி மற்ற செயல்கள் செய்யும் போது ஆரம்பத்தில் எரிச்சல் வந்தாலும், இப்போதெல்லாம் சுஜா சுஜாவாக இருந்து முகத்திற்கு நேராக வைக்கும் விமர்சனங்கள் தரம் காரம் குறையாமல் இருப்பது அவரின் நேர்மை மற்றும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.
கணேஷ் பிந்து மற்றும் ஹரிஷ் போன்றோர் விளையாட்டுக்காக தங்களை மாற்றி கொண்டநடிகர்கள். அதனால் அவர்கள் உண்மை முகம் எது என்று தெரிய போவது இல்லை. ஆனால் இவர்கள் சுஜா மற்றும் காஜலிடம் கொஞ்சம் நேர்மையை கற்று கொண்டு இருக்கலாம்.