18 மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டான். களத்தில் இருந்து நேற்றே விடியோவை வெளியிட்ட நபர்.

0
79999
sujith
- Advertisement -

ஆழ் துளை குழியில் சிக்கி உயிரிழந்த 2 வயது சிறுவன் சுஜித்தின் மறைவு தான் தற்போது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும், சிறுவனை மீட்கும் பணி என்ற இந்த கோர சம்பவம் கடந்த 3 நாட்களாக நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டது குழந்தை.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டி சுரங்கம் போல் செய்து கொண்டுவந்தனர். ஆனால், ஆழ்துளை கிணறு பகுதியில் குழி தோண்டி செல்லும்போது அங்கு பாறைகள் அதிகமாக இருப்பதால் சுரங்கப் பாதையை ஏற்படுத்துவதில் கொஞ்சம் தாமதமாகியது. மேலும், குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று மக்களும், அரசாங்கமும் போராடிவந்தனர். ஆரம்பத்தில் சுஜித் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பதை மருத்துவ குழு உதவியுடன் சோதனை செய்து அடிக்கடி அறிவித்து வந்தனர்.

- Advertisement -

ஆனால், கடந்த இரண்டு நாட்களாக சுஜித்தை மீட்கும் பணிகள் குறித்து மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுஜித் 18 மணி நேரத்திற்கு முன்னதாகவே சுஜித் இறந்து விட்டதாகவும், குழந்தையின் உடல் முழுவதும் மணல் மூடி விட்டது, கை மட்டும் தான் தெரிகிறது என்று சுஜித்தை காப்பற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இடத்தில் இருந்து இயந்திரத்தை இயக்கும் நபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்று நேற்று மாலை முதலே சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. ஆனால், நேற்று இரவு 10.30 மணி அளவில் தான் ஆழ் துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாகவும் அதன் பின்னர் சுஜித் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் அறிவித்தனர்.

ஆழ்துளை கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டது குழந்தை. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகளை செய்துவந்தனர். அரசாங்கமும்,மக்களும். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய்முடிந்தது . இறுதியாக குழந்தையை மீட்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுவந்தனர். ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளும் பரபரப்பாக சென்று கொண்டுஇருந்தது.

-விளம்பரம்-

சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும், சுஜித்தின் உடலை காண பல்வேறு பொது மக்களும் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும், சுஜித்தின் உடலை கண்ட பலரும் உறவினர் ஒருவரை பறிகொடுத்தது போல கண்ணீர் விட்டு அழும் காட்சிகளை பார்க்கும் போது மிகவும் வேதனை அளித்தது. சிறுவன் சுஜித் விழுந்த ஆழ் துளை கிணறு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் சிமெண்ட் கலவை போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும், சுஜித்தை காப்பாற்ற இயந்திரங்கள் மூலம் போடப்பட்ட ஆழ் துளைகளும் சிமெண்ட் கலவைகளால் நிரப்பப்பட்டு மூடபட்டுள்ளது. கண் போன பின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல ஒரு உயிர் போன பின்பு இது போன்ற நடவடிக்கைகள் எடுத்து என்ன பயன் என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். சுஜித்தின் இந்த இழப்பினால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Advertisement