சீரியலில் நடிச்சதுக்கு இப்படி ஒரு விருதா – பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவிற்கு ஆளுநர் கையால் கிடைத்த கெளரவம்.

0
227
Sujitha
- Advertisement -

அரசியல் பிரபலம் கையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் விருது வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
ஹீரோயின் நீயா நானா.! மேடையில் இருந்து பாதியில் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்  நடிகை.! - Tamil Behind Talkies

தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி வடிநம்மா என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தமிழில் இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

- Advertisement -

சுஜிதா பற்றிய தகவல்:

இந்த சீரியலில் தனம் என்ற கதாபத்திரத்தில் நடிகை சுஜித்தா நடித்து வருகிறார். சுஜிதா கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு ஒரு தங்கையும், ஒரு அண்ணனும் உள்ளார்கள். மேலும், சுஜித்தா அவர்கள் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான். இருந்தாலும் இவர் தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார். இவர் முதன் முதலாக சினிமாத் துறையில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். அதுவும் 41 நாள் குழந்தையாக இருக்கும் போதே சுஜிதா தமிழில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

Pandian Stores Sujitha Acted As Child Artist In Tamil Movies

சுஜிதாவின் திரைப்பயணம்:

பின் நடிகையாக பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமா வாய்ப்பு குறைந்த உடன் இவர் சின்னத்திரைக்கு சென்றார். அதுமட்டும் இல்லாமல் இவர் டிவியில் 30 சீரியலுக்கு மேல் நடித்து இருக்கிறார். தற்போது பிசியான சின்னத்திரை நடிகையாக சுஜிதா திகழ்கிறார். இப்படி தனது சிறு வயதில் இருந்தே சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து இருந்தாலும்

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் சுஜிதாவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. மேலும், இந்த சீரியலை தெலுங்கில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். தெலுங்கிலும் இவர் தான் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் பயணித்து வருகிறார் சுஜிதா. இந்த நிலையில் சுஜிதாவிற்கு விருது கிடைத்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 30 ஆண்டுக்கும் மேலானகடின உழைப்புக்கு சுஜிதாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சுஜிதாவுக்கு கிடைத்த விருது:

அது என்னவென்றால், சமீபத்தில் மாண்புமிகு மகளிருக்காக என்ற விருது நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறந்த ரோல் மாடல் நடிகை என்ற பிரிவில் சுஜிதாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தான் சுஜிதாவிற்கு வழங்கியிருக்கிறார். மேலும், சுஜிதா விருது வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வார்த்தைகளை கூறி வருகின்றனர்.

Advertisement