பிரபல சீரியல் நடிகை சுஜிதா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2’ வில் நடிக்காததது ஏன் என்று கூறியிருக்கும் காரணம் தான் தற்போது இனையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தென்னிந்திய சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சுஜிதா. இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம்தான் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு சுஜிதா அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின் சினிமா வாய்ப்பு குறைந்த உடன் இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது பிசியான சின்னத்திரை நடிகையாக சுஜிதா திகழ்கிறார். என்னதான் சின்ன வயதிலிருந்தே இவர் நடித்து வந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் தான் சுஜிதாவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இருந்தது. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசக் கதையை மையமாகக் கொண்டது. இதில் தனம் (அண்ணி) கதாபாத்திரத்தில் சுஜிதா நடித்திருந்தார். சுமார் 5 ஆண்டுகளுக்கு இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டது. தெலுங்கில் ஒளிபரப்பான இந்த சீரியலில் கூட சுஜிதா தான் தனம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்து, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் அப்பா மகன்கள் பாசத்தை மையமாகக் கொண்டது. இதனிடையே நடிகை சுஜிதா ஒரு பேட்டியில், பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2 வில் வாய்ப்பு கிடைத்தும் தான் நடிக்காததற்கு காரணம் கூறியுள்ளார். அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் என்னை அம்மாவாக நடிக்க கேட்டிருந்தார்கள்.
சுஜிதா கூறிய காரணம்:
மேலும், சீரியலில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது போன்ற கதை. இதில் நான் நடித்தால் நன்றாக இருக்காது என்று நினைத்தேன். பின் சேனல் தரப்பில் இருந்தும் என்னிடம் உங்களுக்காக வேண்டுமென்றால் கதையை மாற்றிக் கொள்கிறோம் என்று கூட சொன்னார்கள். ஏற்கனவே ஐந்து வருடமாக ஒரே கதையில் நடித்து விட்டேன். தற்போது எனக்கு ஒரு மாற்றம் தேவை என்று நினைத்தேன். அதனால் தான் சேனலில் வாய்ப்பு கொடுத்தும் நான் நடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி 5:
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள்தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து, ‘குக் வித் கோமாளி சீசன் 5’ தற்போது தொடங்கி உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகை சுஜிதா பங்கு பெற்று வருகிறார். மேலும், தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு இவர்தான் Chef Of The Week வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.