சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சுகேஷ் மற்றும் அவரின் காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறித்த சம்பவங்கள் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவன் என்று சுகேஷ் சந்திரசேகர் கூறி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தவர் சுகேஷ் சந்திரசேகர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக கட்சி பிளவு பட்டிருந்தது. இதனால் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டார்.

கிலோ கணக்கில் தங்கள், 15 கார்கள்

அதுமட்டும் இல்லாமல் சுகேஷ் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பது மத்திய அமலாக்கத் துறைக்கு தெரியவந்தது. இதனால் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்னை, பெங்களூரு உட்பட சுகேஷ் பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 15 சொகுசு கார்கள் என பலவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement

200 கோடி மோசடி

இதனிடையே சிறையில் இருந்தவாறே சுகேஷ் தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுமார் 200 கோடி பண மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். மேலும், இவருக்கு தொடர்புடைய காதலி, பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. பின் பண மோசடி வழக்கில் சுகேஷ் உள்பட 6 பேர் மீதும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளார்கள்.

அமித்ஷாவின் அலுவலக போன் நம்பர்

அதில் சுகேஷ் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்ஸிற்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் நடிகை ஜாக்குலின் இடம் நட்பை ஏற்படுத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அலுவலக போன் நம்பரை பயன்படுத்தி மோசடி செய்து இருக்கிறார் என்ற புது தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பது,

Advertisement

சுகேஷ் முதலில் டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 வரை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்ஸை தொடர்பு கொள்ள பலமுறை முயன்று இருக்கிறார். ஆனால், அவர் தெரியாததால் ஜாக்லின் அந்த அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. பின்னர் அவரது ஒப்பனைக் கலைஞருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்திலிருந்து அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அழைப்பில் தான் அரசாங்கத்தின் மிக முக்கியமான நபர் என்பதால் சேகரை தொடர்பு கொள்ளுமாறு என்று கூறி இருக்கிறார். இந்த அழைப்பு அமித்ஷாவின் அலுவகத்தில் இருந்து வந்ததாக தெரியவந்தது.

Advertisement

ஜெயலலிதா குடும்பத்தை சேர்ந்தவர்

பின் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலினுடன் நட்பு ஏற்பட்டது. ஆகவே இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்ட அமைச்சர் அமித்ஷா போன் நம்பரை பயன்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளார். அதற்குப் பிறகு சுகேஷ் சந்திரசேகர் தன்னுடைய பெயரை சேகர் ரத்ன வேலா என்று கூறியிருக்கிறார். பின் நடிகை ஜாக்குலினுக்கு கோடிகோடியாக பணம் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தான் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

17 வயதில் இருந்தே மோசடி

மேலும், சன் டிவி தன்னுடையது தான் என்றும் கூறி இருக்கிறார். இந்த மாதிரி மோசடி எல்லாம் இவர் இப்போது செய்ய தொடங்கவில்லை. அவர் தன்னுடைய 17 வயதில் இருந்தே செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இவர் 17வது வயதில் இருந்தே குற்ற நடவடிக்கையில் ஈடுபட தொடங்கி உள்ளார். அவர் மீது பல எப்.ஐ.ஆர்.கள் உள்ளது என்று அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement