எஸ் பி பியால விஜய்யை விட அதிகம் பயனடைந்தவர் போகல – விஜய்யை பாராட்டி பிரபலம் போட்ட ட்வீட்.

0
76492
Ajith
- Advertisement -

பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த வெள்ளிக்கிழமை , செப்டம்பர் 25 பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-

ஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும், பல்வேறு தமிழ் நடிகர், நடிகைகளும் எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அவரது சொன்ன கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

- Advertisement -

எஸ் பி பியின் உடலுக்கு பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதிலும் நடிகர் விஜய், மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அஜித் ஒரு இரங்கல் அறிவிப்பை கூட வெளியிடாதது பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது. அஜித்தை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது எஸ் பி பி தான். அதே போல எஸ் பி பியின் மகனான சரண் அஜித்தின் நெருங்கிய நண்பர் தான்.

அவ்வளவு ஏன் அஜித் சென்ற முதல் ஷூட்டிங்கிற்கு கூட அவரிடம் நல்ல சட்டை இல்லை என்று சரணின் சட்டையை தான் போட்டு சென்றார். அதே போல அஜித்தின் திரைப்பயணத்தில் எஸ் பி பி பாடிய பாடல்கள் அஜித்திற்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் நடிகர் அஜித், எஸ் பி பி மறைவிற்கு வராதது குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிரபல அரசியல் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளரான டாக்டர் சுமந்த், ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், எஸ்பிபி பாடல்களின் மூலம் விஜயை விட அதிகம் பயன் அடைந்த சிலர் ஒதுங்கி இருக்கும்போது விஜயின் இந்த செயல் மதிக்கத் தக்கது என்று குறிப்பிட்டிருந்தார் சுமந்த்தின் இந்த பதிவைக் கண்டு அஜித் ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Advertisement