MSME மோசடி விவகாரம் – பா.ஜ.கவை சேர்ந்த நடிகை நமிதாவின் கணவருக்கு சம்மன்

0
492
- Advertisement -

மோசடி விவகாரத்தில் நமிதாவின் கணவருக்கு சம்மன் அனுப்பி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் MSME புரொமோஷன் கவுன்சிலிங் என்ற அமைப்பின் பெயரில் நிறுவன உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பினுடைய தேசிய தலைவரான முத்துராமன் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

இவர் மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர். பின் இந்த அமைப்பின் தேசிய செயலாளரான துஷ்யந்த் யாதவ் கலந்திருந்தார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். பின் தமிழகத்தின் தலைவராக நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி கலந்து இருக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாக நமிதாவும் கலந்து கொண்டிருந்தார். மேலும், இதில் சிறு, குறு தொழில் நிர்வாகிகளுடன் மத்திய அரசு கடன் விவகாரம் குறித்து பேசி இருக்கிறார்கள்.

- Advertisement -

அதோடு இந்த நிகழ்ச்சியின் பேனரில் இந்திய அரசின் அசோக முத்திரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கவுன்சிலிங் தலைவர் மற்றும் செயலாளர் இருவருமே இந்திய அரசின் முத்திரையை தவறாக பயன்படுத்தியது மற்றும் நமது தேசியக்கொடியை வாகனத்தில் பொருத்தி இருந்தார்கள். இது குறித்து தான் புகார் எழுந்திருக்கிறது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல புகார்கள் எழுந்து இருக்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் சேலம் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் முத்துராமன் துஷ்யந்த் யாதவ் மீது மோசடி புகார் அளித்திருக்கிறார். இது குறித்து புகாரில் அவர், தன்னிடம் இருந்து 41 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்திருப்பதாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். பின் தேசியத் தலைவர் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த அமைப்பின் தலைவரும், செயலாளரும் நிறைய பணம் வாங்கிக்கொண்டு பல மோசடிகள் ஈடுபட்டதாக புகார் அளித்திருக்கிறார்கள். இதனால் இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து காவல் துறையினர் சிறையில் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் புகார் கொடுத்த கோபால்சாமி, தமிழக தலைவர் பதவியை வாங்குவதற்காக நடிகை நமிதாவின் கணவர் நான்கு கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது நமீதாவின் கணவர் மற்றும் முத்துராமின் உதவியாளர் மஞ்சுநாத் ஆகிய இருவரும் இந்த சூரமங்கலம் காவல்துறையில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், இருவருமே ஆஜராகவில்லை. இது தொடர்பாக காவல் துறை விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement