நீ என்ன சாதிச்சன்னு உனக்கு 12,000,00. கேலி செய்த ரசிகருக்கு அஞ்சனா பகிர்ந்த ஸ்க்ரீன் ஷாட்.

0
1937
Anjana-VJ
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வி ஜே அஞ்சனா. இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சன் மியூசிக் தொலைக்காட்சி பணிபுரிந்து இருக்கிறார். தொகுப்பாளினியாக இருந்த போது இவர் பல படங்களின் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்ததது. அந்த குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு வி ஜே அஞ்சனா சில ஆண்டுகள் பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது இவர் மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும், விஜே அஞ்சனா அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.தற்போது வரை இவரை 1.2 மில்லியன் அதாவது 12 லட்சம் பேர் பின்தொடர்ந்து உள்ளார்கள்.

- Advertisement -

பொதுவாக இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் ஃபாலோ செய்வது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அப்படி இருக்க வெறும் தொகுப்பாளினியாக மட்டும் இருந்து வந்த அஞ்சனாவிற்கு 1200000 ஃபாலோவர்கள் இருப்பதை கண்டு பலரும் வியப்படைந்து இருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர் ஒருவர் ‘நீ என்ன அப்படி சாதி சட்ட என்று 1.2 மில்லியன் ஃபாலோவர்கள் உனக்கு இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அஞ்சனா ‘ஒன்றும் கிடையாது. 12 ஆண்டுகள் என்னுடைய வேலையை மட்டும் நான் செய்தேன். எதையும் நான் சாதிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அஞ்சனா என்னுடைய வளர்ச்சி மற்றும் புகழ் அத்தனை விரைவில் எடுத்தது கிடையாது. நிதானமாகவும் கடினமாக உழைத்து 12 ஆண்டுகளில் இந்த இடத்தை நான் பிடித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement