சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார். அதற்கு முன்பாக சில ஆண்டுகள் பிரேக் எடுத்துக்கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார்.
இதையும் படியுங்க : எண்டு கேம் படத்திற்கு ஐயன் மேன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆவீங்க.!
அஞ்சனா அடிக்கடி தனது சமூக வளைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் அஞ்சனா மடிசாரிலும், சந்திரன் வேஷ்டியிலும் இருந்தார்.
இதனை கண்ட சிவகார்த்திகேயன் என்ற ட்விட்டர்வாசி ஒருவர் ‘நீங்கள் என்ன மத வெறி பிடிச்சவரா’ என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அஞ்சனா, கலாச்சாரத்தை பின்பற்றுவது மத வெறி ஆகிவிடாது. இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் அனைவருக்கும் வேண்டியது அன்பு மட்டும் தான் என்று பதிலளித்துள்ளார்.